இரும்புச்சத்து இல்லாமல் போனால்... - தமிழர்களின் சிந்தனை களம் இரும்புச்சத்து இல்லாமல் போனால்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, July 7, 2014

    இரும்புச்சத்து இல்லாமல் போனால்...


    கவனச்சிதறல்
    இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் முக்கியப் பிரச்னை இது. பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தகைய கவனச் சிதறல் ஏற்படும்போது உடனடியாக பெற்றோர்கள், பரிசோத-னையை மேற்கொண்டு அது இரும்புச் சத்தின் குறைபாட்டினால் வந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
    தடுக்கும் முறைகள்
    இரும்புச்சத்துக் குறைபாட்டை ரத்தம், மலம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். குறைபாட்டைக் கண்டறிந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்தும், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் சரி செய்யலாம். அச்சுவெல்லம், முருங்கைக்கீரை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். இதில் எந்த ஓர் அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதித்து அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இரும்பு சக்தியின்மை நம்மை பெருமளவு பாதிக்கும் அளவுக்கு வீரியமானது”

    மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t47396-topic#ixzz36k7IbFla 
    Under Creative Commons License: Attribution

    இரும்பு சத்து குறைபாடு - iron deficiency-
    முக்கியமாக இந்த இரும்பு என்ற தாதுப்பொருள்-mineral- உயிர்வளியை - hemoglobin- நுரையீரலில் இருந்து குருதி வழியாக உடலெங்கும் கொண்டு செல்ல உதவுகிறது.
    குருதிச்சோகை-குருதிக் குறைவு-anemia- செங்குருதி அணுக்களின் குறைபாடு,சோர்வு ,குழந்தைகளின் உடற் சூட்டைக் கட்டுப்படுத்துவதில் சிரமம்,நோய் எதிர்ப்புக் குறைவால் தொற்று, கர்ப்பக் காலத்தில்,மாதவிடாய் காலத்தில்-menstrual periods-  குருதி இழப்பினால் சிரமம் இப்படிப் பல.
    எடுக்கப்படும் இரும்புச்சத்தின் அளவு  குழந்தை முதல் பெரியவர்கள் வரை வேறுபடுகிறது.கர்ப்பகால,மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இது அதிகமாக தேவைப்படுகிறது. 
    கல்சியம் உடலில் சேர விட்டமின் டி தேவைப்படுவது போல், இரும்புச் சத்து எடுக்க வேண்டி வந்தால்  விட்டமின் சி உடன் சேர்த்து எடுப்பது சிறந்தது.

    அத்துடன் இரும்புச்சத்து என்பது விட்டமின் அல்ல. அது ஒரு தாதுப்பொருள்-கனிமம்-mineral -ஆகும்.அதனால் மல்டிவிட்டமின் எடுப்பதால் பலன் கிடையாது.

    மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t47396-topic#ixzz36k7KjebY 
    Under Creative Commons License: Attribution
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: இரும்புச்சத்து இல்லாமல் போனால்... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top