நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்- ஆய்வில் தகவல்! - தமிழர்களின் சிந்தனை களம் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்- ஆய்வில் தகவல்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, July 23, 2014

    நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்- ஆய்வில் தகவல்!

    நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்- ஆய்வில் தகவல்!

    கணினியில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும் என்றும் இதனால், ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள்
    உள்ளது என்றும் நார்வே ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்கள் ஓடி, ஆடி விளையாடுவதைவிட...

    கம்ப்யூட்டரில் விளையாடுவது இன்று அதிகரித்துள்ளது. இவ்வாறு உட்கார்ந்த நிலையில் அதிக நேரத்தை செலவிடும் சிறுவர்களின் எலும்புகள் பலவீனமாகக் கூடும். உடலில் எலும்பிலிருக்கும் எலும்புத் தாது குறையும்போது, எலும்புகள் வலுவிழந்து முறிய நேரிடும். உட்கார்ந்தே பணியாற்றும் சிறுவர்களுக்கு எலும்புத் தாது அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்றும் இது பிற்காலத்தில் ஆஸ்டியோபொராசிஸ் மற்றும் எலும்புமுறிவு போன்றவற்றை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    பிறந்ததிலிருந்து எலும்புகள் வளர்ச்சியடைகின்றன. டீனேஜ் பருவத்தின் இறுதியில் உச்சகட்ட வளர்ச்சியைப் பெறுகின்றன. ஆனால், இந்த எலும்புத் தாது அடர்த்தி குறைபாடானது (Osteoporosis), எலும்புகளின் அதிகபட்ச வலிமை மற்றும் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும். ஒருவரது உடல் எடையும் இத்தகைய குறைபாடுகளால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டிரோம்சோவில் உள்ள நார்வே ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆன்னி விந்தர் கூறினார்.

    15 முதல் 18 வயதுக்குட்பட்ட 463 பெண்கள் மற்றும் 484 ஆண்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் கம்ப்யூட்டர் திரை முன் செலவிடும் நேரமும், எலும்புத் தாது அடர்த்தியும் வயதின் அனுசரிப்பு, பாலியல் முதிர்ச்சி, ஓய்வுநேரம், உடல் செயல்பாடு, புகை, மது பயன்படுத்துதல், முதலியவற்றின் அடிப்படையில் ஆராயப்பட்டது. இதில் பெண்களைவிட ஆண்களே அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் செலவிடுகின்றனர் என்றும், இதனால் அவர்களின் உடல் எடையும் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    சர்வதேச ஆஸ்டியோபொராசிஸ் அமைப்பின் கணக்கீட்டின்படி 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் சராசரியாக ஐந்தில் ஒருவர் இந்தக் குறைபாட்டினாலேயே எலும்புமுறிவுக்கு ஆளாகின்றார்கள் என்று தெரிவிக்கின்றன.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்தால் எலும்பு நோய்- ஆய்வில் தகவல்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top