பிரசவம்-குழந்தை பிறப்பு- இயற்கையும்,செயற்கையும். - தமிழர்களின் சிந்தனை களம் பிரசவம்-குழந்தை பிறப்பு- இயற்கையும்,செயற்கையும். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, July 4, 2014

    பிரசவம்-குழந்தை பிறப்பு- இயற்கையும்,செயற்கையும்.

    பிரசவம்-குழந்தை பிறப்பு- இயற்கையும்,செயற்கையும்.

    தங்கள் பிரசவத்தை ஒவ்வொருவரும் தங்கள் வசதி, மருத்துவர் ஆலோசனை போன்றவற்றை வைத்து முடிவு செய்ய வேண்டி வந்தாலும் கூட,சில விளைவுகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் வியாபாரமாகி விட்ட நிலையில், சில மருத்துவ நிலையங்கள்,பணத்திற்காக CS-C-section (Cesarean section), -செயற்கைப் பிரசவம்- ஐப் பரிந்துரை செய்கிறார்கள். சிலர் அச்சம், கவலை,வலி  காரணமாக செய்ற்கைப் பிரசவத்தை நாடுவதும் உண்டு. 

    மேலை நாடுகள் பலவற்றில் தாய்மார்கள், மருத்துவ ஆலோசனையைப் பெற்று தாங்களே முடிவு செய்கிறார்கள்.இந்த நிலையிலும் பல தாய்மார்கள் இல்லங்களில் பயிற்சி பெற்ற மருத்துவ மாதுகளின் உதவியைப் பெற்று, வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வதை இன்றும் காணலாம்.மருத்துவ நிலையங்களை நாடுபவர்கள் கூட இயற்கைப் பிரசவத்தையே பெரிதும் விரும்புகிறார்கள்.

    Enlarge this image

    இயற்கை முறை பிறப்பு ( vaginal birth ) என்பது சாதாரணமானதும்,  குழந்தை பெற்ற ஒரு மகிழ்வையும் தாய்க்குத் தரும்.அத்துடன் தாயுடன் குழந்தை உடனடித் தொடர்பை(skin to skin contact)  ஏற்படுத்துவதால் ஒரு இன்பமான தாய்மை உணர்வையும், அமைதியையும் மகிழ்வையும், தாய்க்கு கொடுப்பதுடன் உடனடியாக பழைய நிலைக்கு செல்லவும், மருத்துவ பிரச்சனை (medical complications ) மிகக் குறைவாக இருப்பதால், வெகு விரைவில் வீட்டுக்கு செல்ல வழி செய்வதுடன், தாய்ப்பாலை( breastfeeding) தாமதம் இன்றி உடனேயும் கொடுக்க முடிகிறது. 

    குறைந்த கால மருத்துவ நிலைய தங்கல்,அனேகமாக ஒன்று/இரண்டு நாட்களில்,விரைவில் பழைய நிலைக்குத் திரும்புவது,சிக்கல்கள் இருக்காதது, தாய்க்கும், பிறக்கும் குழந்தைக்கும்  சாதகமாக அமைகிறது.

    குருதிப்போக்கு,குருதி கட்டி,உள் உறுப்புப் பாதிப்பு (hemorrhage, blood clots, damage internal organs) இதனால் ஏற்படுவதில்லை.ஒருமுறை இயற்கைப் பிரசவம் ஏற்படுமானால்,பின்னர் அடுத்த பிரசவங்களில் -குழந்தை பெற்றெடுப்பதில்- எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல், குறுகிய நேரத்திலும் விரைவாகவும் பிரசவம் முடிந்து விடுகிறது.

    குழந்தைக்கு சில சமயங்களில் ஏற்படும் சுவாசப் பிரச்சனை,ஒவ்வாமை (allergies, asthma, lactose intolerance,respiratory problems) போன்றவை பொதுவாக ஏற்படாமலும், பிறக்கும் சமயங்களில் anesthesia பிரச்சனை போன்றவையும் இருப்பதில்லை. 

    சில சமயம் perineal area வில் தையல் போட வேண்டி வருமானால்,குறைவாகவும், வலி மிகக் குறைவாகவுமே இருக்கும்.அப்படி ஏற்பட்டாலும், காயம் விரைவில் ஆறி இயல்பு வாழ்க்கைக்கு சில நாட்களில் திரும்பி விடலாம்.

    சாதாரண பிரசவம் எந்த நேரம் நிகழும் என்று சிலருக்கு  தெரியாத நிலை,தாமதம் காரணமாக அதிக நேரம் வலியை தாங்க வேண்டிய நிலையும் இருக்கிறது. யாரிடமாவது கேட்ட அனுபவம் காரணமாக, பயம் கவலை சிலருக்கு இருக்கலாம்.

    சிலருக்கு, எடை கூடிய குழந்தை,அதிக நேர வலி போன்றவை காரணமாக,சீறுநீர் வெளியேற்றம் (urinary incontinence -urinary leaks) வரலாம்.அல்லது மிக அரிதாக maternal hemorrhaging -bleeding ஏற்படலாம்.

    இயற்கை எப்போதும் செயற்கையை விட சிறந்தது தான். இருப்பினும்......................

    அந்த நாளில் இருக்கும் சூழ்நிலை பற்றி, மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்வது சிறந்ததாகும். சில சமயங்களில்  குழந்தையின் இருதய துடிப்பு குறைந்து, தலை மேல்  நோக்கி திசை திரும்பி இருந்து, இப்படியான சமயங்களில் மருத்துவர் ஆலோசனை கூறுவார். தலை பெரிதாக இருந்து சிரமம் இருந்தால் கூட, இயற்கைப் பிரசவம் சாத்தியமே. இந்த நிலையில் மூச்சை அடக்காமல், நன்றாக மூச்சு இழுத்து விடுவது நல்லதாகும். அப்படிச் செய்யாமல் விடுவதால்  உயிர்வளி (Oxygen) குறைபாட்டால், குழந்தைக்கு இதய துடிப்பு குறைவடையலாம்.

    இப்படியான சமயங்களில் மனத் தைரியத்துடன் இருப்பது அவசியம். கருப்பை வாய் திறப்பு பொதுவாக ஐந்து சென்டிமீட்டருக்கு மேல் திறந்ததும் தான்,பிரசவத்திற்கான சமயம் என்பதும், மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கும் நேரம் எனவும் சொல்லலாம். கருப்பை வாய் சிறிது சிறிதாக திறக்க ஆரம்பிக்கும் போது, வலியும் மெல்ல அதிகமாகும். சிலர் அதைத் தவிர்த்து வலி தெரியாதிருக்க, epidural - local anaesthetic -கேட்பதுண்டு.அந்த சமயத்தில் வலி தெரியாது விட்டாலும் கூட, பின்னர் பின்விளைவு ,வலி ஏற்பட்டு சிரமங்களை தரக்கூடும் என்பதால், அந்த epidural ஐத் தவிர்ப்பது சிறந்ததாகும்.

    முதல் குழந்தை என்றால் சிறிது அதிக நேரமும்,அதிக வலியும் இருக்க வாய்ப்புண்டு. அதனால் உடற்பயிற்சி,நடைப்பயிற்சி செய்து வருவதால், இவற்றைக் குறைக்க முடியும்.
    …...............
    வாய் சுகாதாரம்,கால் சுகாதாரம் அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். வெளியில் சென்று வரும் போதும்,படுக்கைக்குப் போகு முன்னரும் பாதணி அணிந்தாலும் கூட,கால்களை நன்றாகக் கழுவிக் கொள்ள வேண்டும். அதனால் தான் நம் முன்னோர்கள்,தற்போது கிராமங்களில் கூட வாசலில் தண்ணீர் குடம் வைத்திருப்பார்கள்.

    அதே போல் வாய் பற் சுகாதாரம் மிக முக்கியமானதாகும். முரசு கரைதல், gum disease போன்றவை, வாயில் உண்டாகும் பக்டீரியாக்கள் (Oral bacteria)  இவைகளினால் இதய நோய்,டயபிடிக் டயிப் 2 ,சுவாச மற்றும் சிறுநீரக நோய்கள்,பிரசவத்தில் ஏற்படும் பிரச்சனைகள்,குறைப் பிரசவம்( premature birth) ,குழந்தை உண்டாக தாமதம்(நீண்ட நாள் குழந்தை இல்லாது இருப்பது) போன்றவை ஏற்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு,வாய் சுகாதாரத்தை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். காலையும் மாலையும் நன்கு குறைந்தது இரண்டு நிமிடங்களாவது பல் துலக்குவது அவசியம்.
    http://www.puthiyatamil.net/t47349-topic#82679
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பிரசவம்-குழந்தை பிறப்பு- இயற்கையும்,செயற்கையும். Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top