உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!! - தமிழர்களின் சிந்தனை களம் உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Wednesday, July 25, 2012

      உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!

      உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!!
      http://bangfitness.com/wp-content/uploads/2012/06/heartbeat.png
      இன்றைய காலத்தில் இதய நோய் வருவது என்பது புதிதான விஷயம் அல்ல. அதிலும் அத்தகைய இதய நோய் பல இளைஞர்களுக்கும் விரைவில் வருகிறது. ஏனெனில் அதிகமான மனஅழுத்தம் வேலை செய்யும் இடங்களிலும், வீட்டிலும் அதிகம் இருப்பதே, இன்றைய இளைஞர்களுக்கு விரைவில் வருவதற்கு காரணம். முதலில் மாரடைப்பு 50 வயதை கடந்தவர்களுக்கு, அதிலும் ஆண்களுக்கே அதிகம் வரும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெண்களுக்கு 40 வயதானாலே மாரடைப்பு மற்றும் இதயத்தில் பக்கவாதம் போன்றவை வந்து தொல்லை தருகிறது.
      இவையெல்லாம் வருவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கவழக்கங்கள் காரணங்களாக அமைகின்றன. ஆகவே அத்தகைய இதய நோயை வராமல் தடுக்க வேண்டுமென்றால், அதற்கு ஒரே ஈஸியான வழி நல்ல ஆரோக்கியமான உணவும், உடற்பயிற்சியும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
      உணவுகள்...

      மாதுளை : கண்ணை கவரும் அழகான நிறத்தையுடைய முத்துக்கள் போன்ற பழங்கள் இதய நோய்க்கு மிகவும் சிறந்தது. பொதுவாக இதய புண்கள் அதிகம் இருந்தால், இதய நோய் விரைவில் வரும். அதனை தடுக்க தினமும் மாதுளையை ஜூஸ் செய்து குடித்தால் உடலில் இரத்த அழுத்தமானது குறைந்து, இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, அதில் இருக்கும் வைட்டமின் சி, இதயத்தில் இருக்கும் புண்களையும் சரிசெய்கிறது.
      பூண்டு : இதய நோய் இருப்பவர்களை மருத்துவர்கள் பூண்டை தினமும் சாப்பிட சொல்வார்கள். மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்களும் பூண்டை சாப்பிட வேண்டும். பூண்டானது உடலில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் பூண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கலாம். மேலும் பூண்டானது இரத்தத்தின் அளவை சீராக்குவதோடு, உடலில் இருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது.

      ஸ்வீட் கார்ன் : கார்னில் அதிகமாக குரோமியம் மற்றும் தாதுக்கள் அதிகம் இருப்பதால், இதய நோய் வராமல் தடுக்கும். மேலும் இதில் போலேட் ஆன வைட்டமின் பி9 இருப்பதால், இவை இதயத்தில் பக்கவாதம் மற்றும் அடைப்பு போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கும்.

      கிவி : உடலுக்கு மற்றும் இதயத்திற்கு மிகுந்த ஆரோக்கியத்தை தரும் கிவி பழத்தை தினமும் சாப்பிட்டால் நல்லது. ஏனென்றால் இவற்றில் நார் சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால், இவை உடலில் இருக்கும் தேவையில்லாத கொலஸ்ட்ராலை குறைக்கும். மேலும் இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் காப்பர் அதிகம் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தாதுக்கள் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

      பெர்ரி : பெர்ரியில் இருக்கும் பாலிபினால், ஆரோக்கியமற்று இருக்கும் இரத்த குழாய்களை பாதுகாக்கிறது. ஏனெனில் பாதிக்கப்பட்ட திசுக்கள் இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக் கூடும். ஆனால் பேர்ரியில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட், இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, உடலில் தேவையான கொழுப்புகளை மட்டும் அதிகப்படுத்தும். உதாரணமாக, அவுரிநெல்லிகள் இதயத்தில் இருக்கும் புண்களை குறைத்து, இதயத்தை வழுவாக்குகிறது.
      மேற்கூறிய உணவுகளை உண்பதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் தான், உடலில் இருக்கும் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் கரைவதோடு, கொலஸ்ட்ரால் அளவும் குறையும். மேலும் உடற்பயிற்சி செய்தால் உடலில் இருக்கும் இரத்த குழாய்கள் நன்கு வளைந்து கொடுத்து, இரத்த ஓட்டத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீராக ஓடச் செய்யும். அதற்கு என்னென்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்களே கூறுகின்றனர்.

      உடற்பயிற்சிகள்..

      தினமும் வாக்கிங் செல்ல வேண்டும். அவ்வாறு நடக்கும் போது நன்கு சுறுசுறுப்போடு நடக்க வேண்டும்.
      ஜாக்கிங் செல்லும் போது மெதுவாக செல்ல வேண்டும்.
      சைக்கிலிங் செய்யும் போது வேகமாக செய்ய வேண்டும்.
      நீச்சல் தினசரி அடித்தால், பக்கவாதம் வராமல் இருக்கும்.

      இந்த சிறு உடற்பயிற்சிகளை செய்தால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அவ்வாறு தினமும் செய்தால் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக இருக்கும். எதற்கும் உங்களின் உடல் நிலையை பொறுத்து, மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று, இந்த உடற்பயிற்சிகளை செய்யலாமா என்று எதற்கும் கேட்டுத் தொடங்குங்கள் என்றும் கூறுகின்றனர்.
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: உணவும் உடற்பயிற்சியும் இதய நோயைத் தடுக்கும்!!! Rating: 5 Reviewed By: Unknown