அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு... - தமிழர்களின் சிந்தனை களம் அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, July 24, 2012

    அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு...

    அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு...

    இன்றைய காலகட்டத்தில் அலர்ஜியானது பலருக்கு ஏற்படுகிறது. அது ஏற்படுவதற்கு நமது உடலில் உள்ள திசுக்கள் வழக்கத்திற்கு மாறாக செயல்படுவதால் ஏற்படுவதே ஆகும். அதுமட்டுமல்லாமல் உடலானது மிகவும் உணர்திறன் மிக்கதாகவும், எளிதில் கிருமிகளால் பாதிக்கக்கூடியதாகவும் மாறிவிடுகிறது. அதிலும் எந்த இடத்தில் அலர்ஜியானது ஏற்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அலர்ஜியானது ஏற்படும். இவ்வாறு அலர்ஜி ஏற்படும் போது, அதனை சாராதணமாக விட கூடாது, விடவும் முடியாது. ஏனெனில் அலர்ஜியானது வந்துவிட்டால் ஒரு இடத்தில் நிம்மதியாக உட்காரக் கூட முடியாது. மேலும் இன்றைய காலத்தில் கலரும் வேலைக்காக அடிக்கடி இடமானது மாற வேண்டியிருக்கிறது. ஆகவே அத்தகைய அலர்ஜி எப்படி திடீரென்று வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, எவ்வாறு அதிலிருந்து குணமாவது என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

    அலர்ஜி எப்படி வரும்?

    பொதுவாக அலர்ஜியானது தூசி, பூச்சிக் கடி மற்றும் உணவுப் பொருட்களால் வரும். அதுமட்டுமல்லாமல் புதுமையான சூழ்நிலைகளாலும் வரும். அதிலும் உணவுகளான முட்டை, வேர்கடலை, கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் மற்றும் பால், சோயா பீன்ஸ், சாக்லேட், கோதுமை போன்றவற்றை உண்பதாலும், தொடர்ச்சியான மன அழுத்தம், உளவியல் ரீதியான காரணிகள், தூசிகள் அதிகம் இருக்கும் இடங்களில் இருப்பது, பூச்சிகள் கடித்து அதனை சாதாரணமாக நினைத்து இருப்பது போன்றவற்றால் அலர்ஜியானது வருகிறது.

    அறிகுறிகள்...

    கடுமையான தலைவலி, அதிகபடியான காய்ச்சல், மன அழுத்தம், ஆஸ்துமா, ஒற்றைத் தலைவலி, மூச்சுத்திணறல், மூக்கு ஒழுகுதல், பதட்டம் அடைதல், கண்களைச் சுற்றி கருவளையம் வருதல், ஆங்காங்கு வீக்கங்கள், தேவையில்லாத அரிப்புகள், சருமமானது சிவப்பு நிறத்தில் இருப்பது போன்றவையெல்லாம் இருந்தால் அலர்ஜி இருப்பதற்கான காரணங்களாகும்.

    அலர்ஜி போவதற்கான வீட்டு மருந்து...

    1. சந்தனப்பவுடருடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு பேஸ்ட் செய்து, அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவினால், சற்று நேரத்தில் அரிப்புகள் போய்விடும். இது ஒரு சிறந்த பலனையும் தரும்.

    2. பாதாம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.

    3. எந்த பொருளையும் அரிப்பு ஏற்படும் இடங்களில் தடவ விருப்பம் இல்லாதவர்கள், புதினா இலையை தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து, சிறிது சர்க்கரை கலந்து, தினமும் இரண்டு முறை பருகினால், அரிப்புகள் போய்விடும்.

    4. அலர்ஜி வந்தால் எப்போதும் அரிப்புகள் தான் அதிகம் வரும். அதற்கு பப்பாளி விதையை அரைத்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனால் அரிப்புகள் எளிதில் குணமாகிவிடும்.

    5. மற்றொரு இயற்கையான வழி என்னவென்று கேட்டால், எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவ வேண்டும்.

    6. கசாகசா விதைகளுடன், தண்ணீர் மற்றம் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து பேஸ்ட் செய்து, அரிக்கும் இடங்களில் தடவினால் உடனே அரிப்புகளானது போய்விடும்.

    7. அலர்ஜி போவதற்கு ஒரு எளிமையான வழி என்னவென்றால் வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். மேலும் ஆப்பிள் சாற்றினாலான வினிகரை தண்ணீரில் கலந்து குடித்தாலும் அலர்ஜியானது போய்விடும். அதுமட்டுமல்லாமல் 5 துளிகள் ஆமணக்கெண்ணெயை ஏதேனும் ஒரு கப் பழங்களுடன் அல்லது பழச்சாற்றுடன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். அதிலும் சிறந்தது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை ஜூஸ் செய்து ஒன்றாக கலந்து குடித்தாலும் அலர்ஜி மற்றும் அதனால் வந்த அரிப்பும் பறந்தே போய்விடும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: அலர்ஜியால் அவஸ்தபடுறீங்களா? ஈஸியான வீட்டு மருந்து இருக்கு... Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top