சிறுநீரக கற்கள் உருவாவதால் ஆண்களும் சரி, பெண்களும் சரி பெரும் பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர்.
கல்சியம் மற்றும் விட்டமின்-டி மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு சிறுநீரக கல் உருவாக அதிக சாத்தியம் இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்துள்ளது.
தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு இந்த மாத்திரைகளை சாப்பிடும் போது ரத்தம், சிறுநீர் ஆகியவற்றில் கல்சியம் சத்து அதிகரித்து கற்கள் உருவாகிறது என எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
இதே நேரத்தில் உடல் எடையை குறைக்க லோர்காசெரின் என்ற மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைச்சகம் ஒப்புதல் கொடுத்து இருக்கிறது.
இந்த மாத்திரையை ஒரு ஆண்டு சாப்பிட்டு வந்தால் 3 சதவீதம் முதல் 3.7 சதவீதம் உடல் எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment