குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் ! - தமிழர்களின் சிந்தனை களம் குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் ! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, July 29, 2012

    குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் !

    குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் !http://www.netterimages.com/images/vpv/000/000/012/12233-0550x0475.jpg

    ஆண் குழந்தைகளை மட்டுமே தாக்கக் கூடிய அபூர்வ நோய் ‘மஸ்குலர் டிஸ்ட்ரஃபி' எனப்படும் தசைத்திறன் குறைவு நோய். இது குழந்தையின் உடலை படிப்படியாக ஊனமாக்கி, உயிரைக் குடிக்கும். இந்தக் கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்குள் பெரும்பாலும் உயிரிழக்க நேரிடுகிறது. இந்த நோயின் வீரியத்தை குறைந்தது 5 வயதுக்கு மேல்தான் உணரமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    ஆண்குழந்தைகளை மட்டுமே தாக்கி வந்த இந்த நோய் அபூர்வமாக பெண் குழந்தைகளைத் தாக்குகிறது. நமது நாட்டில் ஒவ்வொரு 2000 குழந்தைகளுக்கும், ஒரு ஆண் குழந்தை இந்நோயால் பாதிக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை, அடிக்கடி கீழே விழும். படிகளில் ஏறும்போது, பிடிப்பின்றி ஏற இயலாமல் போகும். 2 வயது முதல் 5 வயதுக்கு உள்பட்ட காலத்தில், நோய் தாக்கப்பட்ட குழந்தையின் நடை, ஓட்டம் வித்தியாசப்படும்.

    கால்களை நேராக வைக்க முடியாமல் வளைந்து வைக்கலாம். வெளிப்பார்வைக்கு, எந்தவித ஊனமோ, குறைபாடோ வெளியில் தெரிவதில்லை, குழந்தை நன்றாகவே தோற்றமளிக்கும். கருவில் உருவான இந்நோய், படிப்படியாக தீவிரமடைந்து, 10-12 வயதில் முழுவதும் நடக்கவோ, நிற்கவோ, நீண்ட நேரம் அமரவோ முடியாத நிலை ஏற்படும். சுயமாக, ஒரு டம்ளர் தண்ணீரைக் கூட தூக்க முடியாது. 12-18 வயதில் உடலின் மற்ற உறுப்புகளில், நோயின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கும். சுவாசம், ஜீரணம் தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும். 18 வயதுக்கு மேல் படுத்த படுக்கையாகவும், 20-30 வயதுக்குள் உயிரிழப்பும் நேரிடலாம். எனவே நோய் பாதித்தவர்கள் 24 மணி நேரமும் ஒருவர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும். இந்த நோயினை மருத்துவப் பரிசோதனைகள் மூலம்தான், அறியமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோயின் தீவிரத்தை உணர்ந்த மேலைநாட்டு மருத்துவர்களும் மரபணு ஆராய்ச்சியாளர்களும் நோய்க்கான மருந்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வைட்டமின் பி, டி

    தசை திறன்குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உணவுகளை கொடுத்தால் அவர்களின் மரணத்தை தள்ளிப்போட முடியும் என்கின்றனர் நிபுணர்கள். வைட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த உணவுகளை கொடுப்பதனால் இந்தநோயின் பாதிப்பு ஓரளவிற்கு கட்டுப்படும். அதே போல் வைட்டமின் டி உணவுகளை உண்ணக்கொடுக்கவேண்டும். சூரியஒளியில் வைட்டமின் டி அதிகம் கிடைக்கிறது எனவே தசைத்திறன் நோயினால் பாதித்த குழந்தைகளை தினசரி சிறிதுநேரம் சூரியஒளி படுமாறு நடக்கச் செய்யலாம்.

    செலினியம் நிறைந்த உணவுகள்

    பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் இளமை காக்கும் உணவுகளாகும். இந்த ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் ‘இ' யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமினும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன. எனவே வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கவேண்டும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: குழந்தைகளை தாக்கும் தசைத்திறன் குறைவு நோய் ! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top