‘ரோஜா’வின் மருத்துவ குணங்கள்… - தமிழர்களின் சிந்தனை களம் ‘ரோஜா’வின் மருத்துவ குணங்கள்… - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, July 25, 2012

    ‘ரோஜா’வின் மருத்துவ குணங்கள்…

    ‘ரோஜா’வின் மருத்துவ குணங்கள்…
    http://www.allindiaflorist.com/imgs/flow5.jpg
    முட்களுடன் கூடிய ‘ரோஜா’ செடி மிகுந்த அழகுடன் கானப்படும். மணம் நிறைந்த ரோஜா பூக்களை பெண்கள் விரும்பி கூந்தலில் வைத்துக்கொள்வார்கள். அலங்கார செடியாகவும், பூக்களுக்காகவும்,மருத்துவ உபயோகத்துக்காகவும் ரோஜா செடி வளர்க்கப்படுகிறது.

    ரோஜா பூக்களில் இருந்து ‘அத்தர்’ எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், ஒக்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜா பூக்கள் பயன்படுகின்றன.

    ரோஜா இதழ்கள் 50 எண்ணிக்கையில் சேகரித்து அரை லிட்டர் வெந்நீரில் போட்டு 12 மணி நேரம் ஊற வைத்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த தண்ணீரில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக வரும் வரை சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதில் 25 மில்லி பன்னீர் சேர்த்து 3 வேளையாக குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகி வரும்.

    10 கிராம் எடையில் ரோஜா இதழ்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடி கட்டி குடி நீராக்கி, சீனி சேர்த்து குடித்தால் பித்த நோய் கட்டுப்படும். இந்த குடிநீரால் வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகி வரும்.

    ரோஜா குல்கந்து அற்புத மருந்து பொருள். ரோஜா இதழ்களுடன் இரு மடங்கு எடையில் கற்கண்டு சேர்த்து பிசைந்து, சிறிது தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்தால் குல்கந்து ஆகிவிடும். இதை காலை, மாலையில் நெல்லிக்காய் அளவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், வெள்ளைபடுதல் ஆகியவை குணமாகும்.

    ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக இரு வேளை சாப்பிட்டு வந்தால் இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை வலுப்பெறும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ‘ரோஜா’வின் மருத்துவ குணங்கள்… Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top