முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள் - தமிழர்களின் சிந்தனை களம் முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Friday, March 29, 2013

      முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்

       usetamil.net
      இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் உள்ள பெரிய பிரச்சினை முடி உதிர்தல் ஆகும்.
      இவர்கள் கீழே உள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றி முடிஉதிர்தல், இளநரை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
      * முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து, ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் பளபளக்கும் உங்கள் கூந்தல்.
      * முடி உதிர்வதை தடுக்க அதிகம் அயர்ன், வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும்.
      * தற்போது ஏகப்பட்ட பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. அது முற்றிலும் தவறு. தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.
      * எண்ணெய் குளியல் மிகவும் அவசியம். சிறிது நல்ல எண்ணெயில் இரண்டு மிளகு, பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும். முடி உதிர்வதையும் தடுக்கலாம்.
      * கறிவேப்பிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.
      • Blogger Comments
      • Facebook Comments

      0 comments:

      Item Reviewed: முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள் Rating: 5 Reviewed By: Unknown