கூந்தலுக்கு கண்டிஷனிங் செய்வது எப்படி?
• முதலில் தேவைப்படும் ஷாம்பு, கண்டிஷனர் (முடியை நன்கு பராமரிக்க ஷாம்பு
போட்ட பிறகு முடியில் தேய்த்து குளிக்க பயன்படுத்தும் பொருள்) மற்றும்
சீப்பை எடுத்துக் கொள்ளவும்.
• முடி சிக்காவதைத் தடுக்க குளிக்கப் போவதற்கு முன்பே, நன்றாக பிரஷ் வைத்து சீவி சிக்கை நீக்கிக் கொள்ளவும்.
• முடியை வெதுவெதுப்பான நீரில் 30 வினாடிகள் நன்கு நனைக்கவும்.
• முடியின் நீளத்திற்குத் தக்கபடி, உள்ளங்கையில் ஷாம்புவை எடுத்துக் கொள்ளவும்.
• தலையின் உச்சியில் ஷாம்புவை தடவி, தலை முழுவதும் விரல் நுனிகளால் மசாஜ் செய்து, பின் முடி நுனி வரை தேய்க்கவும்.
• பின் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், ஷாம்பு முழுவதும் நீங்கும் வரை நன்கு அலசவும்.
• இப்பொழுது சிறிது கண்டிஷனரை, உள்ளங்கையில் விட்டு, இரண்டு கைகளால் தடவி,
கூந்தல் முழுவதும் தடவ வேண்டும். குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படியாக
தடவக் கூடாது.
• 2 முதல் 3 நிமிடங்கள் வரை கண்டிஷனரைத் தலையில் முழுவதும் பரவும் படி மெதுவாக விரல்களால் நன்கு தேய்த்துக் கொண்டிருக்கவும்.
• இப்பொழுது தலைமுடியை வெதுவெதுப்பான நீரில், கண்டிஷனர் முழுவதுமாக நீங்கும் வரை நன்கு அலசவும்.
• இறுதியாகக் குளிர்ந்த நீரால் வேகமாக அடிக்கவும். அப்பொழுதுதான் தலையில்
உள்ள மயிர் துவாரங்கள் அடைபட்டு, கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பைத் தரும்.
• தலைமுடியின் ஈரத்தை ஒரு துணியால் ஒற்றி எடுக்கவும். முடியைப் பிழியக்கூடாது.
• முடியைக் காற்றிலேயே உலர விடுவதுதான் ஆரோக்கியமானது. ஹேர் ட்ரையர் மூலம் உலர வைப்பதால் முடி வறண்டும் சுருண்டும் போகும்.
0 comments:
Post a Comment