மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !! - தமிழர்களின் சிந்தனை களம் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Thursday, March 21, 2013

    மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !!

    USETAMIL.NET
    மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !!

    மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு ‘ஹெய்ம்லீக் மேன்யூவர்’ என்னும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்கவேண்டும்.

    இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும். அந்நிலையிலேயே அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் நிவாரணம் கிடைக்கும்.

    ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டால்?

    குழந்தைகள் காசு, பட்டாணி என்று கண்டதையும் எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும். குழந்தைகளின் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் இரண்டுமே மிகவும் குறுகிய விட்டத்தில் இருக்கும். இதனால், இந்த மாதிரியான பொருட்கள் மிக எளிதாக மூச்சுக் குழாயை அடைத்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

    குழந்தையின் மூச்சுக் குழாய் அல்லது உணவுக் குழாயில் பொருட்கள் அடைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை முன்பக்கம் குனியவைத்து ஒரு கையால் தாங்கியபடி, ஒரு தோள்பட்டை எலும்புகளுக்கு இடையில் உள்ளங்கையின் அடிப்பாகத்தால் ஓங்கித் தட்ட வேண்டும்.

    இப்படிச் சில முறைகள் தட்டினால் தொண்டையில் சிக்கியுள்ள பொருள் வாய் வழியாக வெளியேவந்துவிடும்.பொதுவாக மூச்சுத்திணறலில் அவதிப்படுபவர்களுக்குக் குடிப்பதற்கு எதுவும் கொடுக்கக் கூடாது. இது தொந்தரவை அதிகப்படுத்தும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: மூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி !! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top