பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள் - தமிழர்களின் சிந்தனை களம் பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 30, 2013

    பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்

     USETAMIL.COM
    தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல.

    பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் , அந்த பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும் மூன்று நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது.
    மேலும், மாதவிலக்கு ஆகும் நாளுக்கு முந்தைய 7 நாட்களும், மாதவிலக்கு ஆன பிறகு வரும் 7 நாட்களும் பாதுகாப்பான நாட்கள் என்று கூறப்படுகிறது.

    ஆனால், மாதவிலக்கு சுழற்கி சரியாக இல்லாதவர்களுக்கோ, மாதவிலக்கு சரியாக ஏற்படாதவர்களுக்கோ இந்த பாதுகாப்பான நாட்கள் ஒத்து வராது.

    உடல் நலக்குறைவால் பாலுறவு நாட்டம் குறைவு : பெண்களுக்கு பொதுவாக 50 வயது எட்டும்போது, மாதவிலக்கு நிற்கத் தொடங்கும் அதுபோன்ற இயற்கையாக மாதவிலக்கு நின்ற பெண்களோ அல்லது கட்டி போன்ற பல காரணங்களால் கர்ப்பப்பையை நீக்கிய பெண்களோ உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், அவர்களின் பாலுறவுப் புணர்ச்சி நாட்டம் குறைவாக அமெரிக்க ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டு எலும்பு தேய்மான பிரச்சனை, ஆஸ்துமா போன்ற நோய்கள் இருப்பின் அவர்களுக்கு பாலுறவில் விருப்பம் இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

    இதற்காக 30 வயது முதல் 70 வயதுடைய சுமார் ஆயிரத்து 189 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இவர்களில் இயற்கையாக மாதவிலக்கு நின்நவர்களில் 7 விழுக்காட்டினரும், ஆபரேஷன் செய்து கொண்டவர்களில் 12 விழுக்காட்டினரும் செக்ஸ் உறவில் நாட்டமின்றி இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top