ஜுரம் என்பது ஒரு அறிகுறி மட்டுமே , அதுவே வியாதி அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே .
ஆனால் சிறு குழந்தைக்களுக்கு ஜுரம் வந்தால் சோர்வடைந்து எதுவும் சாப்பிடாமல் ,குடிக்காமல் இருக்கும் .இது உடலில் உள்ள நீர் சத்தை குறைத்துவிடும் .இது மேலும் உடல் வெப்பத்தை அதிகரிக்கும் .
எனவே ஜுரம் வந்தால் செய்யவேண்டியது என்ன ?
அதிகமான திரவ உணவினை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும் - காய்கறி சூப் ,ஐஸ் போடாத பழச்சாறு
எளிதில் காற்றோட்டம் உள்ள பஞ்சினால் ஆனா உடையை மட்டுமே போடவேண்டும் .முடிந்தால் டயபரை கூட கழட்டிவிடுவது நல்லது .
ஸ்வெட்டர் கண்டிப்பாக போடகூடாது .ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து சுரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும் .எனவே கண்டிப்பா கூடாது .இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு .
ஏற்கனவே சுர வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக இதை கடைபிடிக்கவேண்டும் !
சரி ஸ்வட்டர் எப்போது போடலாம் :
எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க்ப் பயன்படுத்தலாம்.
பயணம் செய்யும்போது ,குளிர்ப்ரதேசங்களுக்கு செல்லும்போது ,
இந்திய போன்ற வெப்பநாட்டில் இருக்கும் போது நாம் இதனை அதிகமாக உபயோகிக்க தேவை இல்லை .முக்கியமாக ஜுரம் உள்ளபோது
0 comments:
Post a Comment