ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்? - தமிழர்களின் சிந்தனை களம் ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, April 29, 2013

    ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?




    நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் "ஸ்ட்ரோக்' ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

    எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உனவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

    வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

    தினசரி பொட்டாசியம் அளவு 1,600மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது!

    ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.

    பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் சீரற்ற இருதயத் துடிப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும்.

    பொட்டாசியம் அளவுடனான உணவுவகைகளை எடுத்துக் கொள்வதில் அனைத்து நாட்டு மக்களுமே பின் தங்கியுள்ளனர்.

    பொட்டாசியம் அளவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஏற்றி, உப்பைத் தவிர்த்து வந்தால் ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் சாவுகளை பாதியாகக் குறைக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

    இந்த ஆய்வு அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி நடத்தும் இதழில் வெளியாகியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top