மென்மையான, வழுவழுப்பான சருமத்தைதான் அனைவரும் விரும்புகின்றனர். கிரிஸ்டல் கிளியரான முகத்தைப் பெற அழகு நிலையங்களுக்குச் சென்றால் அங்கே ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி அளவேண்டும். எனவே வீட்டிலேயே வேக்சிங் செய்து கொண்டால் குறைந்த செலவில் அழகான மென்மையான முகத்தை பெறலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
உள்ளூர் மருந்து கடைகளில் முகத்திற்கு பூசுவதற்கு தேவையான மெழுகு விற்பனை செய்யப்படுகிறது. நமது சருமம் எத்தகையது என்பதை டெர்மட்டாலஜிஸ்ட்டுகளிடம் சோதனை செய்து அதற்கேற்ப மெழுகு வாங்கலாம். வேக்ஸ் செய்வதற்கு முன்னதாக முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் வேக்ஸ் செய்ய முடியும். முகத்தைப் போல கைகளையும் சுத்தம் செய்துவிட்டு மெழுகினை தொடலாம்.
கடைகளில் கிடைக்கும் மெழுகானது கட்டியாக இருக்கும். இதனை இளம் சூட்டில் உருகவைக்கலாம். மிதமான சூடு இருந்தால் மட்டுமே அதனை அப்ளை செய்யவேண்டும். அதிக சூடு முகத்தை பொசுக்கிவிடும் ஜாக்கிரதை. உருகிய நிலையில் உள்ள மெழுகினை முகத்தில் லேயர் லேயராக அப்ளை செய்யவும். முகத்தில் முடி வளரும் பகுதிக்கு எதிர் பகுதியில் அப்ளை செய்யவும். அப்பொழுதுதான் முகத்தில் எளிதாக முடியை நீக்க முடியும். அதேபோல அதிகமாக வேக்ஸ் போடுவதும் ஆபத்து. இது உங்களின் சருமத்தை பாதிக்கும். எனவே வேக்ஸ் நீக்கிய உடன் சருமத்தை மென்மையாக்க பேசியல் லோசன் பூசுங்கள் முகச் சருமம் மென்மையாகும்.
அடிக்கடி வேக்ஸிங் செய்வதும் சருமத்தை பாதிக்கும் எனவே நான்கு வாரங்களுக்கு ஒருமுறை வேக்ஸிங் செய்தால் போதும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். முதன் முறையாக வேக்ஸிங் செய்பவர்கள் நேரடியாக முகத்தில் அப்ளை செய்யாமல் கால்களில் தடவி டெஸ்ட் செய்து கொண்டு உபயோகிப்பது நல்லது. இல்லையெனில் அலர்ஜி கோளாறுகள் ஏற்பட்டு உள்ள அழகும் போய்விடும்.
நன்றி போல்டு ஸ்கை
0 comments:
Post a Comment