கோடையில் வியர்வையின் காரணமாக கூந்தல் பிசுபிசுப்புத் தன்மையோடு இருக்கும். தலையில் எண்ணை அதிகம் இருந்தால் வியர்வை அதனுடன் சேர்ந்து சிக்குப் பிடித்துக் கொண்டு பொடுகுத் தொல்லையும் உண்டாகும். முடிகொட்டும் பிரச்சினையும் உருவாகும்.
முடியின் நுனிப்பகுதியில் முறிவு ஏற்படும். தவிர கோடையில் கூந்தலை சரியாக பராமரிக்காவிடில் முடி செம்பட்டையாகும்.
இதைத் தவிர்ப்பதற்கு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தரமான ஷாம்பு போட்டு தலைக்குக் குளித்து தலையை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.
காலத்தில் கூந்தலுக்கு நிறைய எண்ணை தேய்க்கக் கூடாது.
எண்ணை அதிகம் தேய்த்தால் காற்றில் உள்ள மாசு, தூசு காரணமாக முடி சேதமடையும். எண்ணைக்குப் பதிலாக ஹேர் மாய்ச்சுரைசர், கண்டிஷனர், கிரீம், லோஷன் போன்ற வற்றை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் சற்று குட்டையாக வெட்டிக் கொள்ளலாம். கூந்தலை டிரிம் செய்து நீட்டாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
கூந்தல் கழுத்தில் படாதவாறு மேலே தூக்கிப் போட்டுக் கொள்ளும் வகையில் கொண்டைப் பின்கள் போட்டு ஹேர் ஸ்டைலை அமைத்துக் கொள்ளவேண்டும்.
தலை குளுமையாக இருந்தால் உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.எனவே மூலிகைக் குளியல் எடுத்துக் கொள்வது நல்லது.
புதிதாக பறித்த சிறிதளவு எலுமிச்சம் பழ மர இலை, யூகலிப்டஸ் இலை, வில்வ இலை ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பின்னர் குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும். வியர்வையால் ஏற்படும் துர்நாற்றமும் இருக்காது. இந்த இலைகள் கிடைக்காதவர்கள் அழகியல் கலைஞர்களின் ஆலோசனை பெற்று அவர்களின் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப 'அரோமா' எண்ணை குளியல் எடுக்கலாம்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் கோடையில் மட்டு மின்றி எப்போதுமே முடி கொட்டாது. அதற்கு கீரை வகை களான முளைக்கீரை,பருப்புக் கீரை, பசலைக்கீரை, அரைக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, தண்டுக்கீரை,மணத் தக் காளிக் கீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு சாப்பிடுபவர்கள் கோடையில் அவற்றைக் குறைத்துக் கொள்வது நல்லது.
எல்லாப் பழங்களின் சாறும் ஏற்றது. வெள்ளரி, தர்பீஸ் பழங்கள்,நுங்கு சாப்பிடலாம். இளநீர், மோர் அருந்தலாம்.
காய்கறிகளில் முள்ளங்கி, முட்டைக்கோஸ், பூசணிக்காய், நூக்கல், வாழைத்தண்டு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக தலை முடிக்கு வெயில் காலத்தில் ஊட்டச் சத்தும் தாதுக்களும் மிக அவசியம். எனவே இவை கிடைக்கின்ற வகையில் உணவு முறைகள் அமைய வேண்டும்.
கோடை காலத்தில் கண்கள் எளிதில் சோர் வடைந்துவிடும். தவிர கண்ணுக்கு அடியில் கரு வளையமும் விழும். இதற்கு வெள்ளரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சிறிதளவு வட்டமாக நறுக்கி கண்களில் வைத்துக் கொண்டால் கண்களுக்கு குளுமை கிடைக்கும். கண்களில் புத்துணர்ச்சி இருக்கும்.
நன்றி:http://www.sikams.com/
0 comments:
Post a Comment