ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras - தமிழர்களின் சிந்தனை களம் ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, April 12, 2013

    ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras

    ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras


    ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து
    ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras
      (பைஷஜ்யரத்னாவளி வாதவ்யாத்யாதிகாரம்)
    தேவையான மருந்துகள்:
    1.            தங்கபற்பம் ஸ்வர்ண பஸ்ம                30 கிராம்
    2.            வெள்ளி பற்பம் ரஜத பஸ்ம                20          
    3.            அப்பிரக பற்பம் அப்ரக பஸ்ம              20          
    4.            அய பற்பம் லோஹ பஸ்ம               50          
    5.            பவழ பற்பம் பிரவாள பஸ்ம               30          
    6.            முத்து பற்பம் மௌக்திக பஸ்ம           30          
    7.            ரஸசிந்தூரம் ரஸஸிந்தூர                 70          
    செய்முறை:      
    இவற்றைக் கல்வத்திலிட்டு போதுமான அளவு கற்றாழைச்சாறு (குமரிஸ்வரஸ) கொண்டு நன்கு அரைத்துப் பதத்தில் ரவைகளாக்கி 100 மில்லி கிராம் எடையுள்ள மாத்திரைகளாக்கவும்.
    அளவும் அனுபானமும்:     
     ஒன்று முதல் இரண்டூ மாத்திரைகள் வரை நெய், தேன், சீந்தில் சாறு, ஆட்டுப்பால், பிரம்மிச்சாறு, வெற்றிலைச் சாறு அல்லது சங்க புஷ்பிச் சாறு ஆகியவற்றில் கொடுக்கவும்.
    தீரும் நோய்கள்:  

    வாத நோய்கள் (வாத ரோக), வாத பித்த நோய்கள் (வாத பித்தஜ ரோக), பிரமை (ப்ரம), ஜன்னி (ப்ரலாப), புணர்ச்சிச் சக்தி குன்றிய நிலை (த்வஜ பங்க / நபும்ஸகத்வ).
    தெரிந்து கொள்ள வேண்டியவை
    1. எல்லா விதமான வாத நோய்களுக்கும் இந்த மருந்து மிக சிறந்த மருந்து
    2. முக்கியமாக நடுக்கு வாதம் ,கை கால் நடுக்கம் போன்றவற்றிற்கு சிறந்த மருந்து
    3. தூக்கமின்மைக்கு ..சடாமஞ்சில் அல்லது அஸ்வகந்த சூரணத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
    4. எனது அனுபவத்தில் லக்ஸ்மி விலாச ரச (தங்கம் சேர்ந்தது ) என்ற மாத்திரையுடன் இந்த மாத்திரை .தக்க பத்தியத்துடன் எடுத்துகொள்ள ..கோல்ட் ஆப்சஸ் என்னும் காச நோயால் வரும் கழுத்தில் வரும் கட்டியை கரைக்கவும் ,காசநோய் ,மற்றும் நாள்பட்ட இளைப்பு நோயாளி ,பலம் குன்றிய நோயாளிக்கும் மிக சிறந்த மருந்து
    5. பத்தியம் காத்து -குறிப்பிட்ட மண்டலம் சாப்பிட இளமை திரும்பும் ..நோயில்லா பெரு வாழ்வு வாழ உதவும்
    6. இதய தசைகளை வலுப்படுத்தும்
    7. பக்க வாததிற்கு ...ஏகாங்க வீர ரசம் மற்றும்  தனதனயனாதி கஷாயத்துடன் சாப்பிட பழைய இயல்பு நிலைக்கு திரும்பும் அளவுக்கு மருந்து வேலை செய்யும்
    8. முக வாதத்திற்கும் தருவதுண்டு
    9. உடல் உறவினால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலுக்கு உற்சாகம் அளிக்கும் ..விந்து இழப்பதால் ஏற்படும் சக்தி குறைவை சரி செய்யும்
    10. மூட்டு வலிக்கு சிறந்த மருந்து ...வயதான நோயாளிக்கும் இந்த மருந்து மூட்டில் உள்ள பசை தன்மையை அதிகபடுத்தி ,எலும்பையும் வலுவாக்கும் ..
    11. உடல் உறவு கொண்ட மறுநாள் ஏற்படும் முதுகு வலி ,மூட்டுவலிக்கு இந்த மருந்து சூப்பர் மருந்து
    12. தங்க பற்பம் ,வெள்ளி பற்பம் சேர்ப்பதால் விலை சற்றே அதிகம் ..
    13. பல கம்பெனிகள் ..சரிவர தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பதில்லை ..சேர்க்க வில்லை என்றால் பலனே இருக்காது ...எனக்கு தெரிந்த ஒரு பெரிய பெயர் சொல்லும் கம்பெனியும் ,யோக சொல்லிதரும் நபர் நிர்வகிக்கும் ஆயுர்வேத கம்பெனி மருந்தும் ஒரு அணு அளவும் நினைத்த பலனை தரவில்லை ...அதில் அவர்கள் சாஸ்திரம் சொல்லும் அளவுக்கு தங்க வெள்ளி பற்பங்களை சேர்ப்பார்களா என்பது எனக்கும் சந்தேகம் எழுகிறது ..
    14. முறையான பத்தியம் -எத்தனை நாள் இந்த மருந்தை எடுக்க வேண்டும் என்று படித்த ,காசுக்கு ஆசை படாத ஆயுர்வேத ஒரிஜினல் மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்று எடுத்தால் மூட்டு மாற்ற வேண்டும் என்ற நிலையில் உள்ள மூட்டும் ஏக இறைவன் நாடினால் சீக்கிரம் எந்த வயதிலும் குணமாக வாய்ப்புள்ளது
    15. சர்க்கரை நோயாளியும் ,இரத்த கொதிப்பு நோயாளியும் இந்த மருந்தை தக்க ஆயுர்வேத மருத்துவரின் உதவியோடு எடுத்து கொள்வது  நல்லது ..
    16. முறையாக சாப்பிட்டால் எந்த ஒரு சிறிய பக்க விளைவும் ஏற்படவே ஏற்படாது
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஆண்மைக்கும்- மூட்டுக்கும் -வாத நோய்க்கும் சிறந்த மருந்து ப்ருஹத்வாத சிந்தாமணி-Bruhath Vatha Chinthamani Ras Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top