நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அள்ளி வழங்குபவை, பழங்கள்.
ஆனால் ஒவ்வொரு பழம் பற்றியும் ஒவ்வொரு கருத்து நம்மிடம் உள்ளது.
அந்தவகையில், கர்ப்ப காலத்தில் ஒரு பெண் கருப்புத் திராட்சை சாப்பிடக்கூடாது, மீறி சாப்பிட்டால் குழந்தை கருப்பாகப் பிறக்கும் என்கிற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது.
இது தவறான கருத்து. உண்மையில், கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது.
கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த சஞ்சலம் வேண்டாம்.
தினத்தந்தி
0 comments:
Post a Comment