குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாக - தமிழர்களின் சிந்தனை களம் குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாக - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, April 28, 2013

    குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாக

    முகத்திற்கு பொலிவு தரும் தேன், எலுமிச்சை


    முக அழகுக்கும், தோல் மினுமினுப்புக்கும் சந்தைகளில் நூற்றுக்கணக்கான கிரீம்களும், லோசன்களும் விற்பனைக்கு வந்துவிட்டன. ஒருவாரத்தில் மங்கலான நிறத்தை சிகப்பாக்குகிறோம் என்றும், தோல் சுருக்கத்தை போக்குகிறோம் என்றும் பலவிதவாக்குறுதிகளை கொடுத்து தங்களுடைய தயாரிப்புகளை விற்கின்றன அழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள்.

    நிறத்தின் மீது மோகம் கொண்டு இருக்கும் இந்தியாவில் இந்த அழகு கிரீம்களின் விற்பனை சதவிகிதம் ஆண்டுக்காண்டு அதிகமாகிக்கொண்டே போகிறது. நூற்றுக்கணக்கான ரூபாய் கொடுத்து கிரீம்களையும், சோப்புக்களையும் வாங்கி அவற்றை உபயோகித்து அதன் பலனுக்காக நாள் கணக்கில் காத்திருப்பதை விட நமக்கு நாமே அழகுக் கிரீம்களை தயாரிக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

    ஆரஞ்சு பவுடர்

    உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு பழச் சுளைகளை தின்றுவிட்டு அதன் தோலை நாம் குப்பையில் எறிந்து விடுவோம். இனிமேல் ஆரஞ்சு பழம் சாப்பிட்டால் அதன் தோலை உடனே எறியாமல் வெயிலில் உலர வைக்கவும். நன்றாக காய்ந்த தோலை அரைத்து பொடியாக்கி, அதனுடன் பசும்பாலை கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு அப்ளை செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான முகம் கழுவ தோல் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு மாதத்திற்கு காலை நேரத்தில் இதனை தொடர்ந்து பூசி வரவேண்டும். அப்புறம் பாருங்கள் உங்களின் முகத்தை கண்ணாடியில் பார்த்து நீங்களே வியக்கும் அளவுக்கு முகம் பளிச்சென்று ஆகும்.

    தயிரும் தக்காளிச்சாறும்

    நாம் அன்றாடம் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தயிர் மிகச்சிறந்த அழகு சாதனப் பொருளாகும். தயிருடன் சிறிதளவு தக்காளிச்சாறு அதனுடன் சிறிதளவு ஓட்ஸ் சேர்த்து ஊறவைக்கவும். அதனை நன்றாக கலந்து முகத்திற்கு பூசி சிறிது நேரம் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்தை பொலிவாக்குவதில் இந்த கலவைக்கு ஈடு இணையில்லை.

    சந்தனத்துடன் தயிரும் சேர்ந்து கலந்து முகத்திற்கு பூசுவதைப்போல, கழுத்து மற்றும் கையில் வெயிலால் தோல் கருத்துள்ள இடங்களில் பூசவேண்டும். சிறிது நேரம் காய்ந்த உடன் அதனை வெதுவெதுப்பான நீரில் கழுவ கருமை மாறி விடும்.

    எலுமிச்சையும் தேனும்

    சிறிதளவு பால்பவுடர், எலுமிச்சை ஜூஸ் சிறிதளவு, அரை ஸ்பூன் தேன், ஆலிவ் எண்ணெய் சிறிதளவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். அப்புறம் பாருங்கள் குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாகும்.

    http://viyapu.com/
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: குழந்தையின் முகத்தைப்போல உங்களின் முகம் மென்மையாக Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top