பெண்களே உங்களுக்கான பயனுள்ள சில தகவல்கள் - தமிழர்களின் சிந்தனை களம் பெண்களே உங்களுக்கான பயனுள்ள சில தகவல்கள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, April 30, 2013

    பெண்களே உங்களுக்கான பயனுள்ள சில தகவல்கள்

    வீட்டுக் குறிப்புக்கள்.

    ஈ தொல்லை ஒழிய
    டைனிங்டேபிள் மீது ஒரு கிண்ணத்தில் சிறிதளவு புதினா இலையைப் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பையும் கலந்து வையுங்கள், ஈத் தொல்லை இருக்கவே இருக்காது.


    லெதர் பொருட்கள் பலபலக்க
    தோலில் செய்த எந்தப் பொருளையும், பாலில் நனைத்த துணியால் துடைத்தால், நல்ல பளபளப்பாகி விடும்.



    உப்புப் பாதிப்பிலிருந்து பாத்திரங்களை பாதுகாக்க
    உப்புத்தண்ணீரினால் பாத்திரங்கள் வெள்ளையாக, சொர, சொரப்பாக இருந்தால், மோர் ஊற்றி வைத்து 4 முதல் 5 மணி நேரம் களித்து பாத்திரத்தை கழுவிப் பாருங்கள், பாத்திரம் பளிச்சென்று மின்னும்.


    மாவு அரைக்கீறீர்களா?
    மாவு மிஷினில் மாவு அரைப்பதற்கு முன், சிறிதளவு அரிசியைப் போட்டு அரைத்தபின் எந்த மாவு வேண்டுமானாலும் அரைக்கலாம். நமக்கு முன்பு கம்பு, கேழ்வரகு, கோதுமை, பருப்பு அரைத்தாலும் கவலை வேண்டாம். மாவு சுத்தமாக இருக்கும்.


    டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் டிப்ஸ்
    டீ.வி., ஃப்ரிட்ஜ், ட்யூப் லைட் போன்ற சாதனங்களின் ஸ்விட்ச்களை அணைத்தவுடனேயே (மனம் மாறி) மீண்டும் போடாதீர்கள். ஃப்ரிட்ஜில் உள்ள கம்ப்ரசரும், டி.வியில் உள்ள பிச்சர் டியூப்பும், டியூப் லைட்டில் உள்ள பால்ஸ்டும் இதனால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாகும்.


    மூட்டைப்பூச்சி ஒழிய
    கற்பூரத்தைப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் போட்டுக் கரைத்து, பிரஷ்ஷில் எடுத்து வீட்டிலுள்ள மரச்சாமான்களின் இடுக்குகளில் தடவினால் மூட்டைப்பூச்சி மற்றும் சிறு சிறு பூச்சிகள் ஒழிந்து விடும்.


    மல்லிகைப்பூ அதிக நாள் வாடாமல் இருக்க
    ஃபிரிஜ்ஜில் கருவேப்பிலை, கொத்தமல்லி,வெற்றிலை மற்றும் மல்லிகைப்பூ போன்றவற்றை அலுமினியம் ஃபாய்ல் கவரில் வைத்தால் பத்து நாட்கள் ஆனாலும் அழுகாது.


    பூ வாடாமல் இருக்க
    மல்லிகைப்பூ மாலையில் வாங்கி அடுத்தநாள் அப்படியே வாடாமல் இருக்க, ஒரு பாத்திரத்தை நீரில் முக்கி எடுத்து அதில் பூக்களை வைத்து மூடி வைக்கவும். மறுநாள்வரை பூக்கள் வாடாமல், மனம் குறையாமல் இருக்கும்.


    சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க
    சுவாமி படங்களை பூச்சி அரிக்காமல் தடுக்க, தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து சுவாமி படங்களை துடைக்க வேண்டும்.


    பித்தளை, வெள்ளிப்பாத்திரம் பளபளக்க
    பித்தளை,வெள்ளிப்பாத்திரங்கள் கறுத்துக் காணப்பட்டால், அதற்கு சாதம் வடித்த கஞ்சியில் சிறிது நேரம் ஊறவைத்து, பின் எடுத்துத் துலக்கினால் பாத்திரம் பளபளக்கும்.


    பளிச்சிடும் வெண்மைக்கு
    பழுப்பேறிய வெள்ளைத் துணிகளை வெண்மையாக்க அழுகிய எலுமிச்சை பழத்தையோ, நல்லதையோ பிழிந்து சாறு எடுத்து கால் வாளித்தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து பின் அலசி உலர்த்துங்கள். பிறகு பாருங்கள் வெண்மையை.


    ஊருக்கு போகிறீர்களா?
    ஊருக்கு போகும்போது கக்கூஸ், வாஸ்பேசின் ஆகியவற்றில் கொஞ்சம் பிணாயில் ஊற்றி விட்டுச் செல்லுங்கள். தாங்கள் திரும்பி வரும்போது துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.


    பெயிண்ட் வாடை நீங்க
    புதிதாக அடித்த பெயிண்ட் வாடை நீங்க ஒரு வெங்காயத்தை நறுக்கி வீட்டின் நடுவே வைத்து விட்டால் பெயிண்ட் வாடை நீங்கும்.


    பூச்சிகள் வராமல் தடுக்க
    புத்தகம் வைக்கும் அலமாரி, டி.வி. ஸ்டாண்டு, பீரோ மற்றும் பொம்மைகள் வைக்கும் "ஷோகேஸ்"களில் வசம்பு வாங்கி போட்டு விட்டால் ஆண்டுகள் ஆனாலும் பூச்சியும் வராது, மணமும் தொடர்ந்து இருக்கும்.

    தேங்காய் சமமாக உடைய

    தேங்காயை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவைத்து நடுவில் தட்டி உடைத்தால் சமமாக உடையும்.

    விளக்கு அதிக நேரம் எரிய
    விளக்கு அதிக நேரம் எரிய, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணையும், நல்லெண்ணையும் கலந்து ஏற்ற வேண்டும்.

    கொத்தமல்லி உபயோகம்
    சாதரணமாக கொத்தமல்லி, கருவேப்பிலை போன்றவைளை ஒரு எவர் சில்வர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரை புதிதாகவே இருக்கும்.

    எறும்பிடமிருந்து சர்க்கரையை காப்பாற்ற
    ஒரு பூண்டுப் பல் எடுத்து கையினானேலேயே நசுக்கி மூடிப்பகுதிக்கு சற்று கீழே வளையம் போல் சுற்றி தடவி விட்டால் எறும்புகள் அண்டவே அண்டாது.

    தீப்பெட்டி ஈரமானால்
    தீப்பெட்டி ஈரமாகி நமத்துவிட்டால் அரிசி மாவை அதன் மீது தடவி விட்டுக் கொளுத்தினால் டக் என்று ஏற்ற வரும்.

    ஜாச் செடி அழகாக பூக்க

    ரோஜாச் செடி அழகாக பூக்க, பீட்ரூட்டின் தோலையும், வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாகப் போட வேண்டும்.


    தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க
    குளிர்காலத்தில், ஆமணக்கு எண்ணெய் சில சொட்டு தேங்காய் எண்ணெயில் சேர்த்தால், எண்ணெய் உறைவதை தடுத்து எப்போதும் நீர்த்து இருக்கும்.


    டிபன் பாக்ஸ் திறக்க
    டிபன் பாக்ஸ் திறக்க முடியவில்லை எனில், குழாய்த்தண்ணீரில் சிறிது நேரம் காண்பித்து பின்னர் முயற்சி செய்யுங்கள், எளிதாகும்


    நன்றி கொங்குசுரியன் blogspot .com
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பெண்களே உங்களுக்கான பயனுள்ள சில தகவல்கள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top