கண்கள் பிரகாசமாக இருக்க,
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்
உப்புமா ருசியாக இருக்க,
எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா ருசியாக இருக்கும்
மருதாணி நன்கு சிவக்க,
மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்
புளியோதரை சூப்பராக இருக்க,
ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்
ரவா உப்புமா,
ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
ரசம் ருசி அதிகரிக்க,
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
தக்காளி சட்னி ருசியாக இருக்க,
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
அப்பளம் மொறுப்பு மாறாமல் இருக்க,
பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
அடைக்கு அரைக்கும் போது ,
அடைக்கு அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்
பேன் தொல்லையை போக்க ,
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்
தகவல் தமிழ் களஞ்சியம்
0 comments:
Post a Comment