* எது தனக்கு அழகு என்பதில் அவரவருக்கு தனித்தனி கருத்து உண்டு. அந்த கருத்துப்படி தான் உடை, நடை, பாவனைகளை அமைத்துக் கொள்வார்கள். இதில் மற்றவர்கள் தலையீடு அவர்களுக்குப் பிடிக்காது. காலணிகள், உடைகள் எல்லாமே தங்கள் விருப்பப்படியே அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு வசதி. திடீரென்று லைப்ஸ்டைலை மாற்ற அவர்களால் முடியாது.
* எரிச்சலடையச் செய்யும் முக்கியமான விஷயம், அவர்களை மற்றவர்களோடு ஒப்பீடு செய்வது! ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை உண்டு. அதைப் புரிந்து கொண்டு பாராட்டாவிட்டாலும் ஆண்கள் சகித்துக்கொள்வார்கள். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிட்டு தன்னை தாழ்த்திப் பேசுவதை அவர்கள் விரும்பவேமாட்டார்கள்.
மற்றவர்களோடு ஒப்பிடுவதால் தங்களிடம் தாழ்வுமனப்பான்மை அதிகரித்து, திறமைகள் குறையும் என்பது அவர்களுக்குத் தெரியும். பிடித்தமான ஆண்களை மற்றவர்களோடு ஒப்பிட்டால், அவர்கள் அதை நல்லதாக எடுத்துக்கொண்டு தங்களைத் திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உங்களுக்கு பிடித்த ஆணை ஒன்றுக்கு இருமுறை மற்ற ஆண்களோடு நீங்கள் ஒப்பிட்டால் அவர் உங்களிடம் இருந்து பிரிந்துவிடுவார். அதுமட்டுமின்றி உங்களை மிக முக்கியமான எதிரிகளின் பட்டியலிலும் சேர்த்துவிடுவார்.
* பெர்சனல் டைரியில் நிறைய அந்தரங்கங்கள் இருக்கும். அதனால் அதை ரகசியமாக வைத்திருப்பார்கள். அவர்களுடைய பெர்சனல் டைரியை மனைவி படிப்பதுகூட ஆண்களுக்குப் பிடிக்காது. அதே போல தங்களுடைய கைபேசியை மற்றவர்கள் ஆராய்ச்சி செய்வது அதில் வந்திருக்கும் தகவல்களை மற்றவர்கள் படிப்பதையும் விரும்பமாட்டார்கள். அதில் பெரிய ரகசியங்கள் எதுவும் இல்லாவிட்டாலும், தங்கள் தனிமைக்குள் மற்றவர்கள் தலையிடுவதை அவமானமாக கருதுவார்கள்.
* பெண்களை எப்போதும் தங்களை விட புத்திசாலிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. அது அவர்களுடைய தன்மானத்தை உறுத்தும் விஷயம். அப்படியிருக்க பெண்களின் புத்திமதிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மனதிற்கு அது சரி என்று பட்டாலும், அதை வெளியில் சொல்ல மாட்டார்கள். இவர்களெல்லாம் எனக்கு புத்தி சொல்லும் நிலைமை வந்துவிட்டதே என்று புலம்புவார்கள். அதைமீறி அவர்கள் ஏதாவது ஒரு பெண்மணியின் புத்திமதியை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அந்தப் பெண்மணி அவர்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவராக இருப்பார்.
* உடன் பிறந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள். அவர்களை மற்றவர்கள் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ளவும் தயங்குவார்கள். மனைவி குறை சொன்னால் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தன் உடன் பிறந்தவர்களைப் பற்றி பிறர் கூறும் குறைகளை அவர்களது மனது அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. கூடுமானவரை அவர்களை நியாயப்படுத்துவார்கள். அதனால் வீண் பிரச்சினையே உருவாகும்.
நன்றி….WWW.மாலைமலர்.COM
0 comments:
Post a Comment