குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்! - தமிழர்களின் சிந்தனை களம் குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, April 30, 2013

    குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்!

    https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcR-ByWUI0LLx3cNbLO5OXmtqSFRBoWuClJSjiF079m4drecqZ_S'
    நீண்டநாள் வாழ எல்லோருக்குமே ஆசைதான். அது நனவாக, ஒவ்வொருவரும் தாம் சாப்பிடுவதில் 40 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    முதுமை அடைவதுதான் நம்மை விரைவாக மரணத்தை நோக்கிக் கொண்டு செல்கிறது. முதுமை அடைவதைத் தடுக்கும் ஒரு சிகிச்சை முறையை ஒரு விஞ்ஞா னிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக பழ ஈக்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அதன்மூலம், மனிதர்களின் 'இளமை' நீடித்திருப்பதற்கான மந்திரத்தைக் கண்டு பிடித்துவிடலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.

    இதற்காக பழ ஈக்களை ஏன் விஞ்ஞானிகள் ஆராய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். மனிதர்களைப் போன்ற 60 சதவீத மரபணுக்களை பழ ஈக்கள் கொண்டிருக்கின்றன. அவை முதுமை அடைவதும் ஆச்சரியகரமாக ஏறக்குறைய மனிதர்களைப் போலவே உள்ளது.

    லண்டனில் உள்ள பல்கலைக்கழகக் கல்லூரியின் ஆரோக்கியமான முதிர்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள், மனிதர்களின் மரபியல், வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து வருகிறார்கள். குறிப்பாக, உணவுமுறையைக் கவனிக்கிறார்கள். அதன் மூலம், வயதாவதைத் தடுப்பதற்கான சிகிச்சை முறைக்குத் திட்டமிடுகிறார்கள்.

    இதுதொடர்பான தங்களின் கண்டுபிடிப்பை இந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் ராயல் அறிவியல் கழகத்தின் கோடை அறிவியல் கண்காட்சியில் காட்சிக்கு வைத்தனர். அதன் வாயிலாக, இங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு முடிவுகள் பொதுமக்களின் பார்வைக்குக் கிடைத்தன.

    ஆய்வுக் குழுவில் முக்கியமான விஞ்ஞானிகளுள் ஒருவரான மேத்யூ பைபர் கூறுகையில், வயதாவதுடன் தொடர்புடைய ஜீனை நாம் கண்டுபிடித்தால், வயதாவதையும் தாமதப்படுத்த முடியும் என்று நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம் என்கிறார்.

    பழ ஈக்களிலும், எலிகளிலும் ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்க வேறுபட்ட உணவுமுறைகளையும், மருந்து சிகிச்சையையும் விஞ்ஞானிகள் பயன்படுத்திப் பார்த்தனர். அப்போது கிடைத்த முடிவுகள், மேற்கண்ட சிகிச்சைகள், மனிதர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

    ஆனால் இந்த ஆய்வுகள் தொடங்கி, பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. தற்போது இவையெல்லாம் கருத்தியல் அடிப்படையில்தான் இருக்கின்றன. மனிதர்கள் மத்தியில் இவை எப்போது பயன்படுத்தப்படும் என்று தற்போது கூற முடியாது என்கிறார்

    தினத்தந்தி
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: குறைவாகச் சாப்பிட்டால் ஆயுள் நீளும்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top