உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை - தமிழர்களின் சிந்தனை களம் உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, April 30, 2013

    உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை

    http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS8kJPf35F7DUUiKC9OpG1WFJoOXtHHtJM68266Gn_B6ebMIET2'டென்ஷன்’ - இன்று நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை. அந்த அளவுக்கு வீட்டிலும், வெளியிலும், எங்கேயும், எப்போதும் டென்ஷனும் நம்முடனே பயணிக்கிறது.
    டென்ஷனாக இருக்கும்போது வேலையில் ஈடுபாடின்மை, நம்பிக்கையின்மை, தன்னம்பிக்கைக் குறைதல், தூக்கப் பிரச்னை என்று மன அழுத்தத்துக்கான அறிகுறிகளும் ஆரம்பமாகிவிடுகின்றன.

    கடந்த இரண்டு வாரங்களில் உங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு, கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலை மனதுக்குள் 'டிக்’ செய்துகொள்ளுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு சிகிச்சை தேவையா என்பதை உங்கள் பதில்களே கூறும்.

    1. எந்த ஒரு காரியத்தையும் விருப்பமின்றி செய்தீர்களா?

    அ. ஆம், முழு ஈடுபாட்டுடன் செய்தேன்
    ஆ. ஒரு சில நாட்கள் மட்டும் (1 முதல் 3 நாட்கள்)
    இ. கிட்டத்தட்ட பாதிநாட்கள் (4 முதல் 7 நாட்கள்)
    ஈ. பெரும்பான்மையான நாட்கள் விருப்பமின்றிச் செய்தேன் (8 முதல் 14 நாட்கள்.)

    2. மனம் தளர்ந்து, சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா?

    அ. இல்லை.
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது.
    இ. பாதி நாட்கள் அப்படித்தான்.
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்.

    3. தூங்குவதில் சிரமம் அல்லது போதுமான தூக்கம் இல்லாமல் அவதிப்படுகிறீர்களா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படித்தான்
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
    (ஒரு நாளைக்கு எந்தவிதத் தடங்கலும் இன்றி குறைந்தது எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்)

    4. சோர்வாகவோ அல்லது குறைந்த ஆற்றலுடன் இருப்பதுபோலவோ உணர்கிறீர்களா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படித்தான்
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

    5. பசியின்மை அல்லது அதிகமாகச் சாப்பிடுதல் பிரச்னை உள்ளதா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படித்தான்
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

    6. தோல்வியுற்ற, தன்னைத்தானே வெறுக்கின்ற உணர்வு ஏற்பட்டதா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படி ஏற்பட்டது
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

    7. செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சின்னஞ்சிறு விஷயங்களில்கூட சரியாகக் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

    8. மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கு மிக மெதுவாகப் பேசுகிறீர்களா? வேலை செய்கிறீர்களா? அல்லது அளவுக்கு அதிகமாகப் பரபரப்புடன் இருக்கிறீர்களா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படி இருந்தது
    இ. பாதி நாட்கள் அப்படித்தான் நடந்துகொண்டேன்
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்

    9. வாழ்க்கையை வெறுத்து தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் மனநிலை ஏற்பட்டதா?

    அ. இல்லை
    ஆ. சில தினங்கள் அப்படித் தோன்றியது
    இ. பாதி நாட்கள் அப்படி இருந்தது
    ஈ. கிட்டத்தட்ட எல்லா நாட்களும்
    (உங்களையே வெறுத்துக்கொள்ளும், காயப்படுத்திக்கொள்ளும் அல்லது தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் ஒருநாள் ஏற்பட்டிருந்தால்கூட, அது மிகவும் ஆபத்தானது.)

    (அ- 0, ஆ-1, இ-2, ஈ-3 மதிப்பெண்கள்)

    மதிப்பெண் 0 - மனஅழுத்தம் இல்லாதவர் நீங்கள். இந்த நிலையைத் தக்கவைத்துக்கொண்டால், நீங்கள்தான் மகிழ்ச்சியான நபர்.

    1 முதல் 4 வரை - மிகக் குறைந்த மனச்சோர்வு. மன அழுத்தத்தைக் குறைக்கும் எளிய பயிற்சிகள் செய்யுங்கள். யோகா, தியானம், உடற்பயிற்சிகள் உங்கள் மனச்சோர்வை நீக்கப் பயன்படும்.

    5 முதல் 14 வரை - மனச்சோர்வு. மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் தோன்றுவதுதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். எனவே, மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.

    15 முதல் 19 வரை - சற்றே அதிகமான மனச்சோர்வு.

    20 முதல் 27 வரை - அதிகமான மனச்சோர்வு- நீங்கள் உங்களையே காயப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு மனநிலை கொண்டவராக இருப்பதால் மனநல மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.


    முகநூல்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: உங்கள் மனஅழுத்தத்தை(டென்ஷன்) கண்டறிய சிறிய சோதனை Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top