கோடைகாலத்திற்கு ஏற்ற மூன்று! - தமிழர்களின் சிந்தனை களம் கோடைகாலத்திற்கு ஏற்ற மூன்று! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Sunday, April 28, 2013

    கோடைகாலத்திற்கு ஏற்ற மூன்று!

    altதர்பூசணி:
    கோடையில் தாகத்தை தணிப்பதற்கு தர்பூசணி ஒரு சிறந்த பழம். இத்தகைய பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும். மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.
    தர்பூசணி பழம் சாப்பிட சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே கொடை வள்ளல்.
    கோடைக் காலத்தில் இதன் விளைச்சல் பன்மடங்காக இருக்கும்.அந்தந்த சீசனில் கிடைக்கும் போது நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது தான் உண்மையும் கூட.இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.
    கோடையில் உடல் வெப்பத்தை குறைக்கும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.இது கொடி வகையை சார்ந்தது.அதனால் நீர்ச்சத்தும், விட்டமின்களும் அதிக அளவில் உண்டு.
    இதில் பழம் மாத்திரம் அல்ல, இப்பழத்தின் தோல்,விதை, காய் என அனைத்தும் பயன் தரக் கூடியவை.
    பழத்தை மட்டும் சாப்பிட்டு அதன் அடிபாகத்தை வீசி விடுகிறோம்.பழங்களை கத்தியால் கீறி எடுத்துக் கொண்டு வெள்ளைப் பாகத்தை தயிர் பச்சடியாகவோ, பருப்பு போட்டு கூட்டாகவும் சமையல் செய்து சாப்பிடலாம்.
    பழத்தை ஜூசாக செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.அதனுடன் சிறிது மிளகு-சீரகப் பொடி தூவியும் அருந்தினால் உடனேயே பசி எடுக்கும்.
    கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு குளிர் பானங்கள் கொடுப்பதற்கு பதிலாக இப்பழ ஜூசை வடிகட்டாமல் கொடுக்க, வெயிலில் இழந்த சத்தை மீட்டுக் கொடுக்கும்.
    altதக்காளி:
    பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

    தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி
    கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

    தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

    பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

    தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

    altதக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

    இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

    தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

    விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.
    பெர்ரி பழங்கள்

    பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப் ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும், ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும் குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: கோடைகாலத்திற்கு ஏற்ற மூன்று! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top