அதுவே பெரிய அளவில் உருவாகும் போது முக அழகானது பாதிப்படைகிறது. முகத்திற்கு பயன்படுத்தும் அழகுப் பொருட்கள், அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் இருக்கும் படியாக வைத்தல், சருமத்தை சரியாக பராமரிக்கால் இருத்தல் போன்ற பல காரணங்களால் சருமத்துளைகள் வருகின்றன.
வயது அதிகரிக்க அதிகரிக்க, தோல்களின் மீட்சி குறைவதால், இந்த துவாரங்கள் பெரிதாகும். முகத்தில் ஏற்படும் துவாரங்கள் கண்டிப்பாக நம்மை பாதிக்கும். இத்தகைய பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க சில வழிகள் உள்ளன. அவை.....
• தேன், துவாரங்களின் அளவை குறைக்க உதவும். 2-3 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மூலிகைத் தேனை, முகத்தில் நன்றாக தடவிக் கொண்டு, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்தப் பின், 10 நிமிடங்கள் காய வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
• ஐஸ் கட்டிகளை ஒரு காட்டன் துணியில் சுருட்டி, முகத்தின் மேல் தேய்ப்பது ஒரு எளிய சிகிச்சை முறையாகும். ஐஸ் கட்டிகள் துவாரங்களை இறுக்கமாக்கும். இதனை தினசரி காலை முகத்தில் தடவ வேண்டும். மேலும் இது சரும மெழுகின் உற்பத்தி அளவை இயல்பு நிலையில் வைத்திருக்க உதவும்.
• 5 ஸ்பூன் தேனையும், 2 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியையும், 2 ஸ்பூன் பால் பொடியுடன் கலந்து இந்த கலவையை சமமாக முகத்தில் தடவி, வட்டமான முறையில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இறுதியில் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தவறாமல் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
-tamilkathir-
0 comments:
Post a Comment