உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்:- - தமிழர்களின் சிந்தனை களம் உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்:- - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, May 8, 2013

    உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்:-

    உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்:-

    உடல் எடையை குறைக்க மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகள் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே எளிய உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம்.

    உடல் எடை குறைக்கும் உணவு பொருட்கள்:

    * வெண்ணெய் இன்சுலின் செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது எனவே இதை குறைத்து கொள்வது நல்லது.

    * ஆலிவ் எண்ணெய் உடலில் உள்ள பழுப்பு கொழுப்புகளை கரைக்கிறது.

    * மாட்டிறைச்சியில் எல்டிஎல் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே இதை தவிர்ப்பது நல்லது.

    * ஒரு நாளைக்கு 10 டம்பளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும்.

    * எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டாம், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.

    * பழங்கள் மற்றும் காய்கறிகள் எட்டு பகுதிகளாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.

    * பாதாம் பருப்பு நாளொன்றுக்கு 7 -10 வரை எடுத்து கொள்ளலாம். இது உடல் எடையை சரியான விகிதத்தில் வைக்க உதவுகிறது.

    * கீரைகளில் அதிகப்படியான வைட்டமீன், மினரல்ஸ் மற்றும் பைபர் சத்துக்கள் உள்ளதால் தினம் ஒரு கீரை எடுத்து கொள்ளலாம்.

    * கீரின் டி உடல் எடையை குறைக்கும்.

    * பெரும்பாலான மக்கள் பொரித்த உணவு பொருட்களை அதிகம் விரும்புவார்கள் எனவே அதை குறைத்து கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பை தவிர்க்கலாம்.

    * தாணியங்கள் அதிகமாக எடுத்து கொள்ளலாம்.

    * காலையில் வெறும் வயிற்றில் கேரட் சாறுடன் தேனைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

    * அரிசி மற்றும் கிழங்கு பொருட்களில் கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை அதிகம் உட்கொள்ளாமல் கோதுமை, ஓட்ஸ், பாஸ்தா, ராகி போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    * சாப்பிட்ட பின் உறங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினாலே உடல் எடை பாதி குறைந்து விடும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    3 comments:

    Anonymous said... May 9, 2013 at 10:16 AM

    ## எக்காரணத்திற்காகவும் காலை உணவை தவிர்க்க வேண்டும், அவ்வாறு தவிர்ப்பதால் நாள் முழுவதும் களைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி அடுத்த வேலைக்கு அதிகம் சாப்பிட வேண்டியிருக்கும்.##
    is this is a right point?

    Earning Income said... May 9, 2013 at 10:56 AM

    Vendaam instead Vendum... ;)

    Unknown said... May 23, 2013 at 6:57 PM

    நன்றி .....தவறு சரி செய்யபட்டது

    Item Reviewed: உடல் எடையை குறைக்க சில இயற்கை எளிய வழிமுறைகள்:- Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top