தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? - தமிழர்களின் சிந்தனை களம் தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Saturday, May 4, 2013

    தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?


    அனைத்து பெண்களுக்கும் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரியும். ஆனால் பிரசவத்திற்கு பின்னரும் பெண்கள் பல டயட்களை பின்பற்ற வேண்டியுள்ளது.
    குழந்தையை பெற்றெடுத்துவிட்டால் மட்டும் ஒரு தாயின் பெரிய கடமை முடிந்துவிட்டது என்பதில்லை. அதற்கு பின்னர் தான் அந்த கடமையே ஆரம்பிக்கிறது. ஆம், குழந்தை பிறந்த பின் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும்.

    ஆகவே அவர்களுக்கு வேண்டிய நோய் எதிர்ப்பு சக்தியை தாய்ப்பால் தான் அளிக்கும். ஆனால் அதே நேரம் தாயின் உடலும் மிகவும் வலுவின்றி இருக்கும். அதனால் அவர்கள் நிறைய சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் சத்தான உணவுகள் என்றதும், அனைத்து உணவுகளையுமே சாப்பிட்டுவிட முடியாது. அதற்கென்று ஒரு சில உணவுகள் உள்ளன. அவற்றை மட்டும் தான், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை சாப்பிட வேண்டும். மேலும் அவற்றை மட்டும் சாப்பிடாமல் அனைத்து உணவுகளையும் உண்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

    ஆகவே அத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருப்பதற்கு, எந்த உணவுகளை பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்....
    தாய்ப்பால் கொடுக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்!!!

    காரமான உணவுகள்

    வெங்காயம், மிளகாய் மற்றும் மிளகு போன்ற காரமான உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றிற்கு உப்புசத்தை ஏற்படுத்தும். மேலும் சில நேரங்களில் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு அல்லது வாந்தி போன்றவற்றை கூட ஏற்பட நேரிடும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது மிகவும் சென்சிட்டிவ்வானது. ஆகவே இத்தகைய காரமான பொருட்களை அவர்களது உடல் ஏற்றுக் கொள்ளாது





    சிட்ரஸ் உணவுகள்

    இதுவும் ஒரு வகையான காரமான உணவுப் பொருட்கள் தான். அதிலும் இவற்றில் வைட்டமின் சி மற்றும் அசிடிட்டி அதிகம் உள்ளது. இந்த உணவுப் பொருட்களான அன்னாசி, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் பலவற்றை தாய்மார்கள் சாப்பிட்டால், குழந்தையின் வயிற்றில் ஒருவித அரிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதனை தவிர்ப்பது நல்லது.





    பச்சை இலைக்காய்கறிகள்

    பிரசவத்திற்கு பின் பெண்கள் உடலை தேற்றுவதற்கு நன்கு காய்கறிகளை சாப்பிட வேண்டியது தான். ஆனால் அவற்றில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி மற்றும் வெள்ளரிக்காய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த உணவுப் பொருட்கள் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லையை ஏற்படுத்தும்.





    பால் பொருட்கள்

    தாய்ப்பால் கொடுக்கும் போது அதிகமான அளவில் தாயானவள் பால் பொருட்களை சாப்பிட்டால், அவை குழந்தைக்கு பெருங்குடலில் பெரும் வலி ஏற்படும். ஆகவே அந்த பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.





    மீன்

    மீன்களில் கானாங்கெளுத்தி, ஸ்வார்டுபிஷ், டைல்ஃபிஷ் மற்றும் சுறா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவற்றில் அதிக அளவில் மெர்குரி உள்ளது. இது குழந்தைக்கு மிகவும் பாதிப்பானது. ஆகவே மெர்குரியின் குறைவாக உள்ள மீன்களான டூனா, கெளுத்தி, சாலமன் மற்றும் பல மீன்களை குறைந்த அளவில் சாப்பிடலாம்.




    காப்ஃபைன்

    காப்பியை குறைந்த அளவில் குடிக்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தையின் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, குழந்தைக்கு ஒரு வித நடுக்கம் மற்றும் உடலில் எரிச்சலை உண்டாக்கும்.




    சாக்லேட்

    சாக்லேட்டிலும் காப்ஃபைன் உள்ளது. இவற்றை அதிகம் சாப்பிட்டால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வாயுத் தொல்லையை உண்டாக்கும். எனவே குறைந் அளவில் சாப்பிடுவது நல்லது.





    வேர்க்கடலை

    தாய்ப்பால் கொடுக்கும் தாய் வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால், குழந்தையின் உடலில் அலர்ஜி ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் கூறுகிறது. இருப்பினும் அவை முற்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இவற்றை சாப்பிடுவதையும் தவிர்க்கலாமே!!!






    ஆல்கஹால்

    ஆல்கஹால் பருக வேண்டுமெனில் குழந்தைக்கு நிச்சயம் பக்கவிளைவுகள் உள்ளது. அதிலும் இதனை தாய் பருகினால், குழந்தைக்கு அதிக நேர தூக்கம், உடல் எடை குறைந்துவிடுதல் போன்றவை ஏற்படும். இப்போது நீங்களே ஆல்கஹால் பருக வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவெடுங்கள்.
    நன்றி :newjaffna





    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: தாய்ப்பால் கொடுக்கும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top