நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன? - தமிழர்களின் சிந்தனை களம் நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன? - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Tuesday, May 7, 2013

    நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

    நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன?

    புகைப்படம்: நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன? 

நாக்கின் அடிப்பகுதியில், நா நுனியில், நா பக்கங்களில், நா வேர்ப்பகுதியில், வாயிலுள்ள மெல்லண்ணப்பகுதியில், குரல் வளை மூடி (epiglottis))யினுடைய சளிச்சவ்வில் (mucous membrane) நம்முடைய சுவை அரும்புகள் (taste buds) உள்ளன. தட்டையான உயிர்மங்களால் புறத்தில் மூடப்பட்ட உருள்தொட்டி (barrels) போன்ற வடிவுடையதாய் அவை இருக்கின்றன. மயிரிழை போன்ற நுண்ணிய நூலிழைகளுடன் முடியும் நூற்புக் கதிர் போன்ற வடிவு கொண்ட உயிர்மக்கற்றைகளில் அவை சுவை நரம்புகளுடன் அதனடியில் இணைந்துள்ளன. சுவை அரும்புகள் சுவையை நரம்பிற்கு மாற்றித்தர, நரம்புகள், அச்செய்தியை மூளைக்கு அனுப்பித் தருகின்றன.
 
சுவைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. புளிப்பு (sour), உப்பு (salt), கசப்பு (bitter), இனிப்பு (sweet) இந்த நால்வகைப் பிரிவுடன் சில வேளைகளில் இன்னும் இரண்டு பிரிவுகளான உலோகப் பண்பு வாய்ந்தவை (metallic), காரத்தன்மையுடையவை (alkaline) ஆகியவையும் சேர்க்கப்படுவதுண்டு. பெரும்பாலானவற்றில் மணமும் நறுமணச்சுவையும், மணங்களைப் பொறுத்துச் சுவைகள் அமைவது போலவே அமைகின்றன.
 
சுவை அரும்புகள் வேறுபட்ட சுவைகளை உணருமாறு தனிப்பட்ட குழுக்களாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வாயின் எல்லாப் பாகங்களிலும் சுவையைச் சமமான அளவில் எளிமையாகத் தூண்ட இயலுவதில்லை என்பதால் விளங்கும். இனிப்புப் பொருள்கள் நா நுனியில் நன்றாகச் சுவையை உணர்த்தும்; கசப்புப் பொருள்கள் நாவின் பின் பகுதியில் நன்றாக அச்சுவையையுணர்த்தும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது. நாக்கின் அடிப்பகுதியில், நா நுனியில், நா பக்கங்களில், நா வேர்ப்பகுதியில், வாயிலுள்ள மெல்லண்ணப்பகுதியில், குரல் வளை மூடி (epiglottis))யினுடைய சளிச்சவ்வில் (mucous membrane) நம்முடைய சுவை அரும்புகள் (taste buds) உள்ளன. தட்டையான உயிர்மங்களால் புறத்தில் மூடப்பட்ட உருள்தொட்டி (barrels) போன்ற வடிவுடையதாய் அவை இருக்கின்றன. மயிரிழை போன்ற நுண்ணிய நூலிழைகளுடன் முடியும் நூற்புக் கதிர் போன்ற வடிவு கொண்ட உயிர்மக்கற்றைகளில் அவை சுவை நரம்புகளுடன் அதனடியில் இணைந்துள்ளன. சுவை அரும்புகள் சுவையை நரம்பிற்கு மாற்றித்தர, நரம்புகள், அச்செய்தியை மூளைக்கு அனுப்பித் தருகின்றன.

    சுவைகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. புளிப்பு (sour), உப்பு (salt), கசப்பு (bitter), இனிப்பு (sweet) இந்த நால்வகைப் பிரிவுடன் சில வேளைகளில் இன்னும் இரண்டு பிரிவுகளான உலோகப் பண்பு வாய்ந்தவை (metallic), காரத்தன்மையுடையவை (alkaline) ஆகியவையும் சேர்க்கப்படுவதுண்டு. பெரும்பாலானவற்றில் மணமும் நறுமணச்சுவையும், மணங்களைப் பொறுத்துச் சுவைகள் அமைவது போலவே அமைகின்றன.

    சுவை அரும்புகள் வேறுபட்ட சுவைகளை உணருமாறு தனிப்பட்ட குழுக்களாக உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் வாயின் எல்லாப் பாகங்களிலும் சுவையைச் சமமான அளவில் எளிமையாகத் தூண்ட இயலுவதில்லை என்பதால் விளங்கும். இனிப்புப் பொருள்கள் நா நுனியில் நன்றாகச் சுவையை உணர்த்தும்; கசப்புப் பொருள்கள் நாவின் பின் பகுதியில் நன்றாக அச்சுவையையுணர்த்தும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: நம்முடைய சுவை அரும்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன? Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top