பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!! - தமிழர்களின் சிந்தனை களம் பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, May 3, 2013

    பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!



    அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய ஆசை இருந்தால் மட்டும் போதாது, முறையாக பாதங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளை செய்வதன் காரணமாக அவர்களால் வீட்டில் எப்போதும் காலணிகளை அணிந்து கொண்டே இருக்க முடியவில்லை. மேலும் சிலர் அழகான நடை வேண்டும் என்பதனால், உயரமான ஹீல்ஸ் போடுவது என்று இருக்கின்றனர்.

    ஆனால் ஆண்களின் பாதங்கள் எப்போதும் பெண்களை விட மென்மையாக தான் இருக்கும், ஏனெனில் அவர்களின் பாதங்கள் எப்போதும் ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்கும். ஆகவே அவர்கள் பாதங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பாத பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...

    * குதிகால் வெடிப்பு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள் தான் முக்கியம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவிதாலும், வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே நாம் தான் தினமும் கால்களுக்கு எண்ணெய்கள் அல்லது ஏதேனும் மாஸ்சுரைசரை அவ்வப்போது தடவ வேண்டும். மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால், அது போகும் வரை, கால்களை ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்க வேண்டும்.

    * பாதத்தில் படை: இந்த நோய் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். இந்த படை பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் பாதகளை குளிக்கும் போது நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

    * வறண்ட சருமம்: எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில் தான் அதிகம் காணப்படும். இந்த பிரச்சனைக்கும் அனைவரும் தினமும் பாதிக்கப்படுவர். ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு மாஸ்சுரைசரை தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவினால் நல்லது. முக்கியமாக அவ்வாறு இரவில் படுக்கும் முன் தடவும் போது, பின்னர் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள செல்கள் அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும், பின் பாருங்கள் நாளடைவில் பாதங்கள் நன்கு மென்மையாக இருக்கும். வேண்டுமென்றால் தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது எண்ணெய் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.

    * செருப்பு கடிப்பது: ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே எப்போது காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். மேலும் சில நாட்களுக்கு 2-3 மணிநேரம் தொடர்ச்சியாக போடாமல் இருப்பது நல்லது. இதனால் சருமத்தில் புண் அல்லது சிவப்பு நிறம் ஏற்படுவதை தடுக்கலாம்.

    * பூஞ்சை தொற்று நோய்: பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். மேலும் அவ்வாறு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் போது, விரல்களில் கடுமையாக வலிகள், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். ஆகவே எந்த ஒரு நோயும் கால் விரல்களின் நகங்களில் ஏற்படாமல் இருக்க, ஸ்பா சென்று அல்லது வீட்டிலேயே சரியாக சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.

    வேண்டுமென்றால் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஸ்பா சென்று பாதங்களுக்கு சரியான பராமரிப்பு கொடுத்தால், பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top