மிஞ்சிப்போன சாதத்தில் நீரை விட்டு, மண் பானையில் வைத்துவிடுங்கள். மறுநாள், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தைத் துருவிப் போட்டு உப்பு, சிறிதளவு மோர் சேர்த்து நன்றாகக் கரைத்து அருந்தலாம்.
பலன்கள்: பழைய சாதத்தில் நல்ல பாக்டீரியா வளர்ந்திருக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. மிகக் குறைந்த கலோரியே உள்ளது. நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், சோடியம், பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் இருப்பதால் உடலுக்கு நல்ல தெம்பையும், குளிர்ச்சியையும் தரும். எல்லோரும் அருந்த ஏற்றது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
50 கிராம் பாதாமை மிதமான கொதிநீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். 250 மி.லி. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, பாதாம் விழுது, சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். குளிரவைத்துப் பருகவும்.
பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறைந்த அளவு நார்ச்சத்துக் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் சக்தி கிடைக்கும். காலை வேளையில் அருந்துவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், வயோதிகர்கள் அருந்தலாம்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
ரோஸ் மில்க்
பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ரோஸ் எசென்ஸ் (அ) பவுடர், சர்க்கரை சேர்க்கவும். பிறகு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்.
பலன்கள்: இதயத்துக்கு மிகவும் நல்லது. பால் சேர்ப்பதால் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
நெல்லிக்காய் ஜூஸ்
நான்கு நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு துண்டுகளாக நறுக்கி, அதனுடன், சிறு துண்டு இஞ்சி, ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். தேன் சேர்த்து பருகவும்.
பலன்கள்: ஓர் ஆப்பிளின் பலன் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பார்கள். ஐந்து கிராம் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்து, 200 கிராம் ஆப்பிளில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், வைட்டமின் சி, தாது உப்புகள் ஓரளவு உள்ளன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் இருக்கின்றன.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அருந்த வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற அருமையான ஜூஸ் இது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
ஆப்பிள் மில்க்ஷேக்
ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைவிட்டு, நான்கு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு கப் பால் சேர்த்து பருகவும்.
பலன்கள்: இதில் அதிக அளவு மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், வைட்டமின் சி, பொட்டாசியம் ஓரளவு இருக்கின்றன. கரையும் தன்மையுடைய ஃபைபர் இருப்பதால் கொலஸ்ட்ராலை குறைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் அருந்தவேண்டாம். சிறுநீரகம் பழுதடைந்தவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்களுக்கு ஏற்றது.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
ஸ்ட்ராபெரி ஜூஸ்;
பழங்களிலிருந்து கொட்டையை எடுத்துவிட்டு, பால், தேன் சேர்த்து கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு மிக்சியில் அரைத்து பருகவும்.
பலன்கள்: இதில் கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. ஓரளவு வைட்டமின் சி, சிறிதளவு பீட்டா கரோட்டீன், புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை இருக்கின்றன. நல்ல எனர்ஜியை கொடுக்கும்.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவும். எல்லோரும் அருந்தலாம்.
கோடையைக் குதூகலமாகக் குளிர்ச்சியுடன் கொண்டாடுவோம்!
0 comments:
Post a Comment