சிலந்தி விஷநீரை பீச்சிவிட்டால், அந்த இடத்தில் கொப்புளங்கள் உண்டாகும்.
சுண்ணாம்பு தெளிந்த நீர் - 4 அவுன்ஸ் தேங்காய் எண்ணெய் - 4 அவுன்ஸ் போரிக் பவுடர் - 1 அவுன்ஸ்
மூன்றையும் கலந்தால் வெண்ணிறமாகஇளகிய பதத்தில் இருக்கும். கோழி இறகினால்
கொப்புளங்களில் தினசரிதடவிவர குணமாகும். சிலந்தி கடித்ததைக் கவனிக்காமல்
விட்டுவிட்டால் விஷம் இரத்தத்தில் கலந்து ஊறி சரீரமெங்கும் உருண்டையான
கட்டிகளாக வெளியாகும்.
இதற்கு மருந்தாக குப்பைமேனி, முருக்கு,
எட்டி, வேளை செடிகளின் சாற்றினை எடுத்து உடலெங்கும் பூசி வர குணமாகும்.
அவுரி,உத்தாமனி, குப்பைமேனி இலைகளை அரைத்து கொட்டைப்பாக்கு அளவு பசு மோரில்
பருகி வர விஷம் நீங்கும். உப்பு, புளி இரண்டையும்சேர்க்கக் கூடாது.
0 comments:
Post a Comment