நீங்கள் வீட்டில் இருந்தபடியே ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.
வைட்டமின் ஏ அதிகமுள்ள பழங்கள் தோலுக்கு நல்லது. இது மேல் தோல் வளர்வதற்கு உபயோகமாக இருக்கும்.
பப்பாளி, ஆரஞ்சு, தக்காளி, அவ்கோடா பழம் போன்ற பழ வகைகளைக் கொண்டு ஃபேஷியல் செய்தால் கண்டிப்பாக முகம் பளபளப்பாகக் காணப்படும்.
ஃபேஷியல் செய்யும் முறை:
முதலில் க்ளன்சிங் மில்க் (cleansing milk) கொண்டு முகத்தில் உள்ள அழுக்கை நீக்குங்கள்.
பின்பு, பப்பாளி அல்லது ஆரஞ்சு அல்லது தக்காளி அல்லது அவ்கோடா பழம் போன்ற பழவகைகளைக் கொண்டு முகத்தை 20-25 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். ஃபேஷியல் மஸாஜ் எப்பொழுதும் மேல் நோக்கியே இருக்க வேண்டும்
ஒரு சுத்தமான டவலை வெந்நீரில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும். இப்படி முகத்திற்கு ஒத்தடம் கொடுக்கையில் அழுக்கு வெளியே வரும். சுத்தமான பஞ்சை எடுத்து அழுக்கைத் துடைக்க வேண்டும்.
நிறைவாக ஃபேஸ் பேக் முகத்தில் பூசலாம்.
பச்சைப் பயறு மாவு ஒரு டீஸ்பூன், அரிசி மாவு ஒரு டீஸ்பூன், இத்துடன் சிறிது பால் கலந்து முகத்தில் 15 நிமிடம் வைத்திருந்து சில்லென்ற தண்ணீரீல் கழுவலாம்.
0 comments:
Post a Comment