ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் - தமிழர்களின் சிந்தனை களம் ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Wednesday, May 8, 2013

    ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள்

    http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcT7INXQsTgfbYt2DdKPesDojOFmLBIJev1dXuAAvQcoAkPHlZMlNgஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் பெற்றெடுத்தவுடன் பெண்களின் கஷ்டம் தீர்ந்ததா என்றால் அது தான் இல்லை. அந்த குழந்தையை நல்ல படியாக வளர்க்க தன் உயிரை கொடுத்து சிரத்தை எடுக்கிறாள். வேலைக்குத் செல்லாத பெண்களுக்கே இவ்வளவு பொறுப்பு என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை? அதுவும் குழந்தை பெற்றெடுத்து உடனே வேலைக்குச் செல்ல வேண்டுமானால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கண்கூடு.

    மகப்பேறு விடுப்பு முடிந்து வேலைக்கு திரும்பும் பாலூட்டும் தாய்களுக்கு ஒரு நடுக்கம் இருந்தே தீரும். ஏனென்றால் பலவற்றை சமாளிக்க வேண்டும். ஆனால் கவனமாக திட்டமிட்டால், இந்த மாற்றங்கள் சீராக இருக்கும். குழந்தை பெற்றப் பின் அலுவலகம் செல்வது பாலூட்டும் தாய்களுக்கு ஒரு சவாலான விஷயமே. குழந்தை பெற்றப் பின் சீக்கிரமே வேலைக்கு செல்வதினால் ஏற்படும் சங்கடங்கள் ஏராளம். அவைகளில் சில, குழந்தையை பிரிய வேண்டிய கவலை, அவர்களுக்கு தேவைப்படும் வேளையில் அவர்களுடன் இருக்க முடியாமல் போவதால் ஏற்படும் குற்ற உணர்வு போன்றவைகள். மகப்பேறு முடிந்து வேலைக்கு உடனே திரும்பும் போது, பெண்களை திணறடிக்கும் விஷயம் பல உண்டு. ஆனால் அந்த சவால்களை வெற்றிக் கொள்ள உங்களுக்காக சில குறிப்புகளை அளிக்கிறோம்.

    குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ளுதல்:

    வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் வரை தங்களின் பச்சிளங் குழந்தையின் நினைப்பாகவே இருப்பார்கள். அது அவர்களுக்குள் ஒரு குற்ற உணர்வை கூட ஏற்படுத்தும். இதனால் அவர்கள் ஒரு நல்ல தாய்க்கு உதாரணம் இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வாறு மனம் நினைக்கும் போது ஆழமாக சுவாசித்து, உங்களை நீங்களே நம்புங்கள். குழந்தையை பிரிதலான சவாலை வெற்றிக் கொள்ள பொறுப்புகளை நன்கு அறிந்து, அதை சரிவர வழி நடத்திச் செல்லுங்கள்.


    தாய்ப்பால் ஊட்டுதலுக்கான சவால்கள்: வீட்டில் தாய்ப்பால் கொடுப்பதையும், அலுவலகம் சென்ற பின் மார்பிலிருந்து பாலை எக்கி எடுக்கவும் ஒரு பெண் படாத பாடுபடுகிறாள். ஆனால் இதை சரிவர செய்ய பழகி விட்டால், இந்த சவாலையும் எளிதில் வெற்றி கொள்ள முடியும். அதிலும் அலுவலகம் வந்த பின்னரும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால், அலுவலக மேலாளரிடம் சின்ன இடைவேளைக்கு அனுமதி வாங்கிக் கொண்டு பாலை எக்கி எடுக்கவும். சில அலுவலகம் இதற்காக சுத்தமான ஒரு தனிப்பட்ட அறையை ஏற்பாடு செய்து கொடுக்கிறது. சில அலுவலகம் பெண்களின் பரிந்துரையின் பேரில், இதற்காக தற்காலிகமாக அறைகளை ஏற்பாடு செய்து கொடுக்கும்.

    புது அட்டவணைப்படி பொருந்திக் கொள்ளும் சவால்: பெண்களின் அட்டவணையானது கண்டிப்பாக குழந்தை பெற்றப் பின், குழந்தைக்கு ஏற்றாற்போல் மாறிவிடும். வேலைக்குச் செல்லும் முன் போதிய கால அவகாசம் இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு குழந்தையின் அட்டவணையை மெதுவாக, அலுவலக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    நம்பிக்கைக்குரிய குழந்தைப் பாதுகாவலரை கண்டுப்பிடித்தல்: குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஒரு நல்ல உள்ளூர் குழந்தைப் பாதுகாவலரை ஏற்பாடு செய்துக் கொள்ளவும் அல்லது குழந்தையை பாதுகாக்க வேறு ஒரு நல்ல வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வீட்டு பெரியவர்களை, வீட்டிற்க்கு வரச் சொல்லி குழந்தையை பார்த்துக் கொள்ளச் சொல்லலாம். ஏனென்றால் அவர்கள் குழந்தையை தங்கள் குழந்தையை போலவே பாசம் காட்டி பார்த்துக் கொள்வர். குழந்தையை பார்த்துக் கொள்ள சரியான ஆட்கள் கிடைக்காவிட்டால், நம்பகத்தன்மையுள்ள ஒரு குழந்தை பாதுகாவலரை நியமித்து கொள்ளலாம். அதிலும் அவர்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ளவர்களாக, பாதுகாப்பான சூழலை உருவாக்கத் தெரிந்தவர்களாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    மேலாளரிடம் பேசுங்கள்: அலுவலக மேலாளரிடம் முன் கூட்டியே தாய்மைப் பணியின் அட்டவணையை தெரிவித்து வளையுந்தன்மையுடைய வேலை நேரத்தை கேட்டு வாங்கிக் கொள்ளவும். அதிலும் குழந்தை வளரும் வரை வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் குழந்தையையும் கவனித்து, வேலையையும் நிம்மதியாக பார்க்கலாம்.

    Thanks to Thatstamil.com
    இடுகையிட்டது மணக்கால் அய்யம்பேட்டை
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: ஒரு குழந்தையை பெற்றெடுக்க ஒரு தாய் எவ்வளவு பாடுபடுகிறாள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top