சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து
தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல
தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால்,
உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர் சக்கை
அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப்
படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
Appendicitis (அப்பன்டிசைடிஸ்) – என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால் ஏற்படுகின்றது.
குடல் வளரி அல்லது குடல்வால் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலும், சிறுகுடலும் பிரியுமிடத்தில் புறப்பக்கமாக நீட்டப்பட்ட விரல் மாதிரி அமைந்த நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது. இவ் உறுப்பானது சுமார் 4 அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் கொண்ட ஒரு புழு மாதிரியான தோற்றமுடையது.
அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.
மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது.
இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன. குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.
பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.
அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.
உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழுவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும். வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.
வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்
பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பார்ப்பதன் மூலம் மருத்துவரால் நோயை நிச்சயிக்க முடியும்.
சிகிச்சை
அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.
சிலசமயம் குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.
சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.
இது நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்தது நாம் இப்போது இதை எல்லாம் மறந்து விட்டோம் . சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் இதை உபயோக படுத்திய பிறகு உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெறுவதும் நல்லது தான் . உங்களுடைய மனதிருப்ப்திக்காக

0 comments:
Post a Comment