வேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது ?! - தமிழர்களின் சிந்தனை களம் வேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது ?! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Tuesday, May 7, 2013

  வேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது ?!

  வேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது ?! -

  வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளது. புரதம், லைசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்தப் புரதம் முட்டை மற்றும் மாமிசத்தில் இருந்து கிடைக்கும் புரதத்திற்கு இணையானது. அதனால் வேர்க்கடலை வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது.

  எப்படி சாப்பிடலாம்?

  சமையலில் பல வித உபயோகங்கள் உள்ளது வேர்க்கடலையை சமைக்காமலேயே பச்சையாக தோலூரித்து உண்ணலாம். இல்லை வறுத்து உப்புடன் சாப்பிடலாம். அல்லது வேக வைத்தும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும். வேர்க்கடலையை ஏற்கனவே சமைத்த உணவுகளுடன் சேர்த்தால் அவற்றின் சுவை கூடும்.

  அவித்த வேர்க்கடலையில் சாலட் செய்து சாப்பிடலாம். வெல்லம் சேர்ந்து வேர்க்கடலை பர்பி செய்து சாப்பிடலாம்.

  என்ன பலன்கள்?

  வேர்கடலையை வேக வைத்து சாப்பிட, உடல் பருமன் குறையும், அதையே வறுத்துச் சாப்பிட உடல் எடை கூடும்.
  ரத்தம் ஓட்டம் சீராகும். ரத்த அழுத்தம் குறையும். நரம்புகள் நன்றாகச் செயல்படச் செய்யும்
  வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன் களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது. இதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
  புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்கள் அழிய‌ உதவும்

  பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும்
  விட்டமின் பி3 (நியாசின்) அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. கர்ப்பிணிகளுக்கு நல்லது.

  வேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது. ஆனால் அது நல்ல கொழுப்பு. உடம்புக்குத் தேவையான கொழுப்பு. வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்குப் புரதச்சத்து அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.

  எச்சரிக்கை

  அளவாகச் சாப்பிட அதன்மருத்துவப் பலன் முழுவதுமாகக் கிடைக்கும். அதிகமாக வேர்க்கடலையை சாப்பிட்டால் பித்தத்தை அதிகரிக்கும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம். வேர்க்கடலை வாதத்ததையும் அதிகரிக்கும்.

  கடலை எண்ணெயை அதிகமாக பயன்படுத்துவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

  ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்?

  வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேக வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.

  வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிடவேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன. ஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.

  வேர்க்கடலையை சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது. கசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது. இது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக்கூடியது. நல்ல சத்தான புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.

  நன்றி :டாக்டர் விகடன்

  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: வேர்க்கடலையில் அப்படி என்ன இருக்கிறது ?! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top