கோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த 10 டிப்ஸ்... - தமிழர்களின் சிந்தனை களம் கோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த 10 டிப்ஸ்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

      Thursday, May 9, 2013

      கோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த 10 டிப்ஸ்...

       https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSIAK-FsPQlam6oeBfDmgYqvKaUmeMLYZaGa7APrnzoOj9QIFpx
      கோடை தொடங்கிவிட்டது. இனி சரும பிரச்சனைகளில் குறிப்பாக முகப்பருக்கள் தோன்ற ஆரம்பித்துவிடும். பார்க்க அசிங்கமாகவும், வெடித்தால் வலி மிகுந்ததாகவும் உள்ள‌ முகப்பரு ஒருவரின் தன்ன‌ம்பிக்கையை பாதிக்கும். ஆகவே அத்தகைய முகப்பருக்களை ஆரம்பத்திலேயே போக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக அதனை கிள்ளி விடுவதோ அல்லது உடைப்பதோ கூடாது. இல்லையெனில் அது தழும்பை உண்டாக்கிவிடும். சிலர் முகப்பருக்களை போக்க பலவாறு முயற்சிப்பார்கள். ஆனால் சில நேரங்களில் அவை போகாமல் இருக்கும். ஆகவே அவர்கள் முயற்சியை கைவிட்டு, கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்துவதை ஆரம்பிப்பார்கள். முகப்பருக்கள் ஏற்படுவதற்கு அன்றாடம் மேற்கொள்ளும் சில ஆரோக்கியமற்ற செயல்களும் காரணம். அத்தகைய செயல்களை மாற்றிக் கொண்டு, பின் எந்த ஒரு முயற்சியை மேற்கொண்டாலும், நல்லதே நடக்கும். இப்போது அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போமா!!!

      சாலிசிலிக் க்ரீம் உபயோகிக்கவும்

      முகத்தை எப்போதும் சுத்தமாக வைக்கவும். குறிப்பாக மேக்-அப்பை ஒழுங்காக அகற்றவும். அதிலும் சாலிசிலிக் தன்மை உள்ள ஃபேஸ் வாஷை பயன்படுத்தி முகத்தை கழுவவும்.


      முகத்தை கழுவவும்
      நாள் முழுவதும் வெளியே சென்று, வீட்டிற்கு வந்த‌ பிறகு ஒருமுறை முகத்தைக் கழுவ வேண்டும்.


      அதிகமாக ஸ்கரப் செய்ய வேண்டாம்
      அதிகமாக தேய்க்கவோ, ஸ்க்ரப்பிங் செய்வதோ கூடாது. அது தோல் எரிச்சலை ஏற்படுத்தும்.



      முகத்தை தொடாமல் இருப்பது
      அடிக்கடி முகத்தை தொடக்கூடாது அல்லது எதன் மீதும் முகத்தை உராய விடக்கூடாது. ஏனெனில் இவை முகத்தில் பாக்டீரியாவை ஊடுருவச் செய்யும்.


      நல்ல மேக்-கப் பிராண்ட்
      மேக்-கப் பிராண்ட்களில் ஒட்டியிருக்கும் லேபிளில் 'நான்-காமெடொஜெனிக்' என்று இருப்பதை மட்டுமே பயன்படுத்தவும்.



      வெயிலில் அலையாமல் இருக்கவும்
      அதிகமாக வெயிலில் அலைவதைத் தவிர்க்கவும். இதனால் முகப்பரு வெடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும்.



      மாஸ்க் போடவும்
      வாரம் ஒரு முறை, முகப்பருக்களை போக்குவதற்கான மாஸ்க்குகளைப் பயன்படுத்தவும்.



      தோல் மருத்துவரை அணுகவும்
      ஹார்மோன் சமநிலையின்மையினால் கூட முகப்பரு ஏற்படுகிறது, எனவே தோல் நோய் மருத்துவரை அணுகி, ஹார்மோன்களை சோதனை செய்யலாம்.


      பொடுகை போக்கவும்
      நெற்றியில் அல்லது முதுகில் முகப்பரு ஏற்பட பொடுகு முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். ஆகவே தோல் நோய் மருத்துவர் பரிந்துரை செய்த, பொடுகு-எதிர்ப்பு ஷாம்பு பயன்படுத்துவது முக்கியம்.



      இறுக்கமான ஆடைகளை தவிர்க்கவும்
      உடலில் முகப்பரு இருந்தால், இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்கவும். எதுவும் உதவவில்லை என்றால், தோல் நோய் மருத்துவரை அணுகி, சிறந்த தீர்வு பெறவும். மேலும், முகப்பரு பிரச்சனை அதிகமாக இருந்தாலோ அல்லது அதிகமாக பருக்கள் வெடித்தாலோ கூட, தோல் நோய் மருத்துவரை அணுகவும்.




      நன்றி:http://tamil.boldsky.com/
      • Blogger Comments
      • Facebook Comments

      3 comments:

      Anonymous said... June 2, 2013 at 9:03 AM

      Pulsar- Typically the X Creation Of Quickness

      Feel free to visit my webpage; paternoster

      Anonymous said... June 2, 2013 at 9:19 AM

      Kordor Electronics market Releases Digital camera Cinema Motion picture Distribution
      Technological innovation

      Feel free to surf to my web-site: video convert to mp3

      Anonymous said... June 17, 2013 at 10:11 PM

      Half-round Gutters: Cleaning In addition to Maintenance

      Also visit my web blog - standby ()

      Item Reviewed: கோடையில் ஏற்படும் முகப்பருக்களைக் கட்டுப்படுத்த 10 டிப்ஸ்... Rating: 5 Reviewed By: Unknown