ஆண்கள் அழகாக மாற - தமிழர்களின் சிந்தனை களம் ஆண்கள் அழகாக மாற - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Friday, May 3, 2013

    ஆண்கள் அழகாக மாற

    -->
    --> அழகு என்பது பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் தான். ஆனால் உண்மையிலேயே பெண்களை விட ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்.
    http://i.telegraph.co.uk/multimedia/archive/02175/balld_2175082b.jpg
    ஆனால் பெண்கள் எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், அவர்கள் அழகை பராமரிக்கின்றேன் என்ற பெயரில், தங்கள் அழகை இன்னும் கூட்ட பியூட்டி பார்லர் செல்கின்றனர்.

    அவ்வாறு அவர்கள் செல்வதால், செயற்கையான அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதால், பெண்கள் விரைவிலேயே முகச்சுருக்கத்தை அடைந்து, முதுமை தோற்றத்தில் காணப்படுகின்றனர்.

    ஆனால் ஆண்கள் எத்தனை வயதானாலும் இளமையாகவே காணப்படுகின்றனர்.

    இருப்பினும் அவர்கள் வேலையின் காரணமாக வெயிலில் நீண்ட நேரம் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    தற்போது அடிக்கும் வெயிலின் வெப்பம் உடலின் சக்தி, அழகு ஆகியவற்றை விரைவில் கெடுத்துவிடுகிறது.

    அதனால், அவர்களது அழகும் கெடுகிறது. ஆகவே அவ்வாறு ஏற்படுவதை தவிர்க்க, முகத்திற்கு ஒரு சில மாஸ்க்களை செய்து வந்தால், முக அழகைப் பாதுகாப்பதோடு, சருமமும் சற்று மென்மையாக அழகாக இருக்கும்.

    அத்தகைய ஆண்களுக்கான ஃபேஸ் மாஸ்க்கள் என்னவென்று படித்துப் பார்த்து, அதனை செய்து பாருங்களேன்…

    ஆரோக்கியமான சருமத்திற்கு சந்தன ஃபேஸ் மாஸ்க்!!!

    சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்தை ஆரோக்கியமாக வெளிப்படுத்துவதற்கும், சருமத்தில் இருக்கும் அழுக்குகளை முழுமையாக நீக்குவதற்கும் பயன்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல், சருமத்தில் எந்த ஒரு வெடிப்பும், மந்தமான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். ஆகவே அத்தகைய சந்தனத்தை வைத்து எப்படி ஃபேஸ் மாஸ்க் செய்வதென்று பார்ப்போமா!!!

    ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் சந்தனப்பவுடர், ஒரு டேபிள் ஸ்பூன் மூல்தானி மெட்டி பவுடர் மற்றும் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை போட்டு, நன்கு கெட்டியான ஒரு பேஸ்ட் போல் செய்யவும்.

    பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். ஆனால் இந்த ஃபேஸ் மாஸ்க் சாதாரண சருமத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறந்தது.

    ஏனெனில் இது சருமத்திற்கு ஈரப்பசையைத் தரும். மேலும் இது முகத்தில் முகப்பரு, பழுப்பு நிற சருமம் ஆகியவற்றை நீக்கி, நன்கு ஒரு பொலிவான நிறத்தை தரும்.

    இதனை வாரத்திற்கு இரு முறை செய்து வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

    விடிகுரல்
    • Blogger Comments
    • Facebook Comments

    1 comments:

    Unknown said... May 4, 2013 at 11:41 AM

    sir the tips u give for mens beauty are good and useful thanks fo that.
    but why did u post thepic for men beuty, how funny it is, it just looking like teasing us. (hahaha)

    Item Reviewed: ஆண்கள் அழகாக மாற Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top