5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை அவசியம். - தமிழர்களின் சிந்தனை களம் 5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை அவசியம். - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, September 12, 2014

  5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை அவசியம்.

  5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை அவசியம்.

  காய்ட்டர்' என்ற ஆங்கில சொல் முறையற்ற தைராய்டு சுரப்பியின் வளர்ச்சியினை குறிப்பதாகும். இந்த காய்ட்டர் உருவாக சுரப்பிதான் காரணம் என்பதில்லை. 

  அதிக ஹார்மோன், குறைந்த ஹார்மோன், சரியான அளவு ஹார்மோன் இப்படி எவற்றிலும் தைராய்டு சுரப்பி முறையற்ற பெரிய அளவு வளர்ச்சி அடையலாம். பொதுவாக இந்த `காய்ட்டரு'க்கு கூறப்படும் காரணம் `அயோடின்' குறைபாடுதான். ம

  ற்றொரு காரணம் உடம்பின் எதிர்ப்பு சக்தியே அவரது தைராய்டு சுரப்பினை அழிப்பதுதான். இந்த `காய்ட்டர்' ஒன்றாகவோ, பலவாகவோ இருக்கலாம். 

  `காய்ட்டர்' பற்றி அறிவது எப்படி? 


  மருத்துவர் உடல் பரிசோதனை செய்யும் பொழுது எளிதில் அறிய முடியும். நாமே கண்ணாடி முன் நின்று சுய சோதனை செய்து கொள்ளலாம் என்றாலும் என்னுடைய அறிவுரை மருத்துவரிடம் செல்வதே நல்லது. 

  ரத்த பரிசோதனையும் செய்து சிகிச்சை அளிக்கப்படும். பலநேரங்களில் இதற்கு சிகிச்சை தேவையும் இருக்காது. ஆனால் இது பெரிதாகிக் கொண்டே போனால் மூச்சுக் குழாயினை அடைக்கும் என்பதால் சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். `காய்ட்டர்' இருப்பவர் வருடம் ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

  * தைராய்டு பிரச்சினை உடையவர்களை அதிகம் காலிப்ளவர், ப்ரோகோலி போன்றவற்றினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. 

  காரணம்: இவை தைராய்டு சுரப்பியினை முறையாக வேலை செய்ய விடுவதில்லை. இதற்காக இதனை ஒதுக்க வேண்டியதில்லை. அதிகம் உண்ணாமல் இருப்பதே போதும்.


  * தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அதிகம் கால்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்த பால், கீரை போன்றவற்றினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறப்படுகின்றது. 

  காரணம்: இவை அயோடின் சத்து எடுத்துக் கொள்வதில் குறை பாட்டினை ஏற்படுத்தலாம். மருந்தும் இத்தகு உணவும் ஒரே நேரத்தில் உட்கொள்ளாமல் நல்ல இடைவெளி விட்டு எடுத்துக் கொள்ளலாம். 

  * சோயா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

  காரணம்: மேற்கூறியது போல் அயோடின் சத்தினை எடுத்துக் கொள்வதில் குறுக்கீடு ஏற்படுகின்றது. இவ்வகை உணவுகளை மாலையில் எடுத்துக் கொண்டால் காலையில் எப்போதும் போல தைராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

  இதன் பொருள் இந்த உணவு வகைகளையும் தைராய்டு மருந்தினையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொதுவாக குறைந்த ஹார்மோன் அளவு உள்ளவர்கள் குறைந்த கலோரி உணவு, கடலை உணவு, நார் சத்து உணவு, வைட்டமின்கள் எடுத்துக் கொள்வது அவசியம். 

  தைராய்டு குறைவினால் ஏற்படும் குறைபாடுகளை நீக்க மருந்துடன் கீழ்கண்ட இயற்கை முறைகளையும் கையாளுவது நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். 

  உணவு முறையினால் ஏற்படும் தீர்வுகள்: 


  * தைராய்டு குறைவினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்பொழுதும் உடல், மூளை சோர்வோடு இருப்பார்கள். ஆகவே இவர்கள் சக்தி பெற சர்க்கரை, காபி போன்றவைகளை அடிக்கடி எடுத்துக்கொள்வார்கள். இது தவறு. இதற்கு பதிலாக அதிக காய்கறி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

  * புரதச்சத்து நிறைந்த பருப்பு, கொட்டை வகைகள், முட்டை எடுத்து கொள்ள வேண்டும். 

  * ஆலிவ் எண்ணெய், தயிர், சீஸ் இவைகள் நல்லது. 

  * வைட்டமின் டி, ஒமேகா 3, ஸிங்க், காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி தேவை. 

  தைராய்டு குறைபாடுகளை எப்படி கண்டறிவது?

  * ரத்த பரிசோதனை 

  * அயோடின் சோதனை 

  *  ஸ்கேன் 

  *  பயாப்ஸி. 

  தைராய்டு ஹார் மோனுக்கு தைராய்டு ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவர் கொடுப்பார். இதில் மிக நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தைராய்டு கட்டிகளுக்கு அளவினையும், தேவையையும் பொறுத்தே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. 

  தைராய்டு புற்றுநோய்: 


  இதற்கு அறுவை சிகிச்சையும், புற்று நோய் சிகிச்சையும், ஹார்மோன் சிகிச்சையும் அளிக்கப்படுகின்றது. கர்ப்ப காலத்தில் தைராய்டு ஹார்மோன் அதிகம் இருந்து முறையான சிகிச்சை பெறாதவர்களாக இருந்தால் அவர்களுக்கு உரிய காலத்திற்கு முன்னரே பிரசவ வலி ஏற்படும். 

  *  வலிப்பு இருக்கலாம் 

  * குழந்தையின் இருதய துடிப்பு அதிகமாக இருக்கும். 

  * குழந்தை சிறியதாக இருக்கும். 

  * குழந்தை இறப்பு ஏற்படலாம். 

  ஹார்மோன் குறைபாடு இருந்து கர்ப்ப காலத்தில் அதற்குரிய சிகிச்சை இல்லாமல் இருந்தால் 

  * ரத்த சோகை 

  * வலிப்பு 

  * குறைந்த எடையுள்ள குழந்தை 

  * குழந்தை மூளை வளர்ச்சியில் பிரச்சினை 

  * குழந்தை பிறப்பிற்கு பிறகு அதிக ரத்த போக்கு போன்றவை ஏற்படலாம். 35 வயதை கடந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் 5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தைராய்டு பாதிப்பு இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: 5 வருடத்திற்கொரு முறை தைராய்டு பரிசோதனை அவசியம். Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top