குறட்டையா... அசட்டை வேண்டாம்! - தமிழர்களின் சிந்தனை களம் குறட்டையா... அசட்டை வேண்டாம்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, September 14, 2014

  குறட்டையா... அசட்டை வேண்டாம்!

  குறட்டையா... அசட்டை வேண்டாம்!


  காது, மூக்கு, தொண்டை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்று பாதித்தாலும் அது மற்றொன்றை பாதிக்கும். தொண்டையில் முக்கிய பிரச்னை டான்சில். மூக்கு துவாரங்களில் சதை வளர்வது போல், தொண்டையில் டான்சில் என்ற உறுப்பு உருவாகிறது. 3 முதல் 16 வயதிற்குள் டான்சில் முழு வளர்ச்சி அடைந்துவிடும். மேற்கொண்டு வளர்வது தவறு. அவ்வாறு வளர்ந்தால் மூக்கிற்கும், தொண்டைக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

  டான்சில் சதை அதிகமாக இருந்தால் பற்களின் கீழ்த்தாடை எலும்பு உள்வாங்கி இருந்தால், உள்நாக்கு பகுதியில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருந்தால் குறட்டை அதிகமாக ஏற்படுகிறது. தொண்டையில் உள்ள டான்சில் சதையினால் காற்று செல்லும் பகுதி குறைந்து குறட்டை ஏற்படுகிறது. அதிக சப்தத்துடன் வரும் குறட்டை திடீரென்று நின்றுவிடும். ஒரு நிமிடம் பேச்சு, மூச்சின்றி இருக்கும். இது உயிருக்கு ஆபத்தானது. உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரியும்.

  குறட்டை பாதிப்பில் தூங்குபவர்களுக்கு ஆழ்ந்த உறக்கம்இருக்காது. மறுநாள் சோர்வு ஏற்படுகிறது. காலையில் தூக்கம் வரும். ஞாபக மறதி ஏற்படும். ஏப்பம் விடுவார்கள். வயிறு பெருக்கும். கொழுப்பு அதிகரித்தால் குறட்டையும் வந்து விடும். உடல் எடையை குறைக்க வேண்டும். நடை பயணம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதே போல் மூக்கின் பின்புறம் சதை வளர்வது சளி தொந்தரவு, சுவாச கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அலர்ஜியினால் ஏற்பட்டால் அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். அடிக்கடி சதை வளர்ந்தால் தகுந்த அறுவை சிகிச்சை, மருந்து, மாத்திரை மூலம் குணப்படுத்தலாம். இதை சரி செய்யாவிட்டால் குறட்டை ஏற்படும். அது மாரடைப்பு, மூளை பாதிப்பிற்கு வழி ஏற்படுத்தும்.

  மூக்கு, தொண்டையில் உள்ள சதை வளர்ச்சியை சாதாரண அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை மற்றும் அதி நவீன கேப்ளேடர் எனும் எலக்ட்ரான் சிகிச்சை முறைகள் மூலம் குறட்டையை குணப்படுத்தலாம். காதில் சிலருக்கு இரைச்சல் கேட்கிறது. வெளியே நிசப்தமாக இருந்தாலும் காதில் சப்தம் விழுகிறது. இதனால் தொழில், தூக்கம் பாதிக்கிறது. இதற்கு காரணம் காதில் ஜவ்வு ஓட்டை விழுந்து, அதற்கப்பால் உள்ள உறுப்புகள் பாதிக்கப்படுவது தான். அறுவை சிகிச்சை மூலம் இரைச்சலை குணப்படுத்தலாம் என்கின்றனர் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர்கள்.

  நன்றி: தினகரன்
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: குறட்டையா... அசட்டை வேண்டாம்! Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top