மாட்டிறைச்சியை ஏன் சாப்பிட கூடாது?
மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்களா? அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின் கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள்.
மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு; மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில் நிற்க வைக்கப்பட்டு; நீரும் புல்லும் மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து, முறிவுற்று; பின்னர் லாரியில் இருந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு; தலைகீழாக தொங்கவிடப்பட்டு; உயிரோடு கழுத்தை அறுத்து... இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?
மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.
உலகளவில் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது.
எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும் புழு பலநேரங்களில் அழிக்கப்படுவதில்லை. அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.
இயற்கை, உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது. மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும், மாட்டிறைச்சியை சாப்பிடுவதை தவிர்ப்பதின் மூலம் சந்தையில் அதற்கான வரவேற்பை குறைக்க முடியும்.
மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://www.puthiyatamil.net/t48614-topic#ixzz3D7LBUwaK
Under Creative Commons License: Attribution
0 comments:
Post a Comment