உடலில் செரிக்காத உணவு கழிவுதான் சளி
சளி என்பது உடலில் செரிக்காத உணவு கழிவுதான். எனவே செரிகக்கூடிய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இயற்கைபிரியன் டி.ராஜமாணிக்கம் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி ஸ்ரீராகவேந்தரா மெட்ரிக் பள்ளியில் மகரிஷி ஆன்மீகத் தொண்டு அறக்கட்டளை சார்பில் 18வது இயற்கை மருத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் டி.வீரப்பன், ஆர்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சளியிலிருந்து நிவாரணம் பெற இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் இயற்கை பிரியன் டி.ராஜமாணிக்கம் சிறப்புரையாற்றினார். அவர் பேசியது: பசி உணர்வு வந்த பின் உண்ண வேண்டும். அதுவும் அளவோடு உண்ண வேண்டும். உணவை உண்ணும் போது கவனசிதைவு இன்றி உண்ண வேண்டும். உப்பின் உபயோகத்தை குறைக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றினால் சளி பிடிக்காது. சளிக்கு நிவாரணம் பெற துளசி சூரணம், இஞ்சி கஷாயம், தினசரி உணவில் சுமார் 100 கிராம் கருவேப்பிலை, கொத்தமல்லி, பொதினா இவற்றில் ஏதேனும் ஒன்றை துவையல் அரைத்து உணவாக உட்கொள்ள வேண்டும். இது உடலில் அமிலத்தன்மையை குறைத்து, காரத்தன்மையை அதிகரிக்கிறது.
நோய் எதிர்ப்பாற்றலும் கூடும் என்கிறார் டி.ராஜமாணிக்கம். முகாமில் அனைவருக்கும் உடற்பயிற்சி, தியானம் கற்றுக்கொடுக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைவருக்கு அறுசுவை இயற்கை உணவு வழங்கப்பட்டது.
- தினமணி
#இயற்கைஉணவு
0 comments:
Post a Comment