சருமத்தில் உள்ள முடியை போக்கும் கஸ்தூரி மஞ்சள்
பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும். கடைகளில் நிறைய லோஷன்களும், க்ரீம்களும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கி உபயோகப்படுத்தினாலும் ஒரேயடியாகத் தீர்ந்து விடாது.திரும்பத் வளர்வதை தடுக்க முடியாது. மேலும் லோஷன்களால், முடிகளை நீக்கி விட்டாலும், முடி இருந்த இடங்களில் அந்த சுவடு இருந்து கொண்டு தான் இருக்கும். இதற்கு எளிய முறையில் முடியை நீக்க வழிமுறைகள் உள்ளன.
அவைகள் என்னவென்று பார்க்கலாம். கஸ்தூரி மஞ்சள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதனை வாங்கி அத்துடன் கொஞ்சம் பச்சைப் பயறு சேர்த்து வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வைத்துக்கொண்டு தினமும் குளிக்கும்போதும், முகம் கழுவும்போதும் போட்டுத் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
இது போட்டதுமே உடனடியாக முடியைப் போக்கி விடாது. நாளாவட்டத்தில் தான் போக்கும்; ஆனால், கட்டாயம் புதிதாக முடிகளை வளரவிடாது. ஏதாவது லோஷன் போட்டு, இந்த அனாவசிய முடிகளைப் போக்கியபின்னர், தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள் பவுடரை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம். இந்த கஸ்தூரி மஞ்சள் பொடி முகத்தில் மஞ்சள் கலரைப் படிய விடாது.
குளிக்கும் போது போட முடியாதவர்கள் தினமும் நேரம் கிடைக்கும் போது இந்த பவுடரை முகத்தில் போட்டு நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும்.
0 comments:
Post a Comment