ஆண்களே! உங்கள் முடியை ஸ்ட்ராங்காவும், ஆரோக்கியமாவும் வெச்சுக்க இதோ சில டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம் ஆண்களே! உங்கள் முடியை ஸ்ட்ராங்காவும், ஆரோக்கியமாவும் வெச்சுக்க இதோ சில டிப்ஸ் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, September 14, 2014

  ஆண்களே! உங்கள் முடியை ஸ்ட்ராங்காவும், ஆரோக்கியமாவும் வெச்சுக்க இதோ சில டிப்ஸ்

  ஆண்களே! உங்கள் முடியை ஸ்ட்ராங்காவும், ஆரோக்கியமாவும் வெச்சுக்க இதோ சில டிப்ஸ்

  இன்றைய காலத்தில் ஆண்களுக்கு விரைவிலேயே வழுக்கை விழுந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான். இப்படி வழுக்கை விழுவதற்கு முன்பு, முடி உதிர்தல் அதிகம் இருக்கும். முடியானது அதிகம் உதிர ஆரம்பித்தால், உடனே முடிக்கு போதிய பராமரிப்புக்களை கொடுத்து வர வேண்டும். இல்லாவிட்டால், வழுக்கை ஏற்பட்டு பின் அவஸ்தைப்படக்கூடும்

  முடி என்பது பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் அழகை அதிகரித்து காட்டக்கூடியவை. எனவே உங்கள் அழகை அதிகரிக்க முகத்திற்கு கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, முடிக்கு சரியான பராமரிப்புக்களை கொடுத்து வாருங்கள். இங்கு ஆண்கள் தங்களது முடியை ஸ்ட்ராங்காகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்யவைகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் முடியானது வலுவடைந்து, வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

  கெமிக்கலை அதிகம் பயன்படுத்த வேண்டாம்  கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தினால், முடியின் வேர்களானது அழிய ஆரம்பித்து, முடி உதிர்தல் அதிகரித்து, நாளடைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும். எனவே அதிக அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

  ஷாம்பு போட்டு குளிக்கவும்  ஷாம்புவிலும் கெமிக்கல் இருந்தாலும், அதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதால், எவ்வித தீமையும் விளையாது. எனவே ஆண்கள் தவறாமல் ஒரு நாள் விட்டு ஷாம்பு போட்டு குளித்து வர வேண்டும். இதனால் தலையில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், முடியானது மென்மையாகவும், ஸ்கால்ப்பில் பொடுகு எதுவும் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

  இறுக்கமான தொப்பிகள்  தலைக்கு எப்போதும் தொப்பியை அணிந்தவாறே இருந்தால், தலையில் அதிகம் வியர்த்து, மயிர்கால்களால் சுவாசிக்க முடியாமல், வலுவிழந்து பின் உதிர ஆரம்பித்து, வழுக்கையை கூட ஏற்படுத்திவிடும்.

  உடனே டவல் பயன்படுத்த வேண்டாம்  ஆண்கள் தலைக்கு குளித்த பின்னர் உடனே டவலை தலையில் போட்டு, நன்கு தேய்க்க ஆரம்பிப்பார்கள். அப்படி செய்தால் தலையில் உள்ள முடியானது, டவலுடன் வந்துவிடும். ஏனெனில் ஈரமாக இருக்கும் போது மயிர்கால்கள் தளர்ந்து இருப்பதால், அப்போது தேய்க்கம் போது, கையோடு வந்துவிடும். எனவே தலைக்கு குளித்த பின்னர், முடியை முதலில் கையால் உலர்த்திவிட்டு, பின் டவல் பயன்படுத்த வேண்டும்.

  ஹெல்மெட்  ஆண்களின் முடி ஆரோக்கியத்தைக் கெடுப்பதில் ஹெல்மெட்டும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எப்படி தொப்பி தலை முடிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதை விட அதிகமாக ஹெல்மெட் தலை முடியை உதிர செய்யும். எனவே ஹெல்மெட் அணியும் போது, ஒரு காட்டன் துணியை தலையில் அணிந்து கொண்டு, பின் ஹெல்மெட் போட்டால், வியர்வையானது உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக நீண்ட நேரம் ஹெல்மெட் அணிவதை தவிர்த்திடுங்கள்

  தலைக்கு எண்ணெய் வையுங்கள்  வாரம் 2 முறை தலைக்கு தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி, மசாஜ் செய்து, நன்கு ஊற வைத்து குளித்து வந்தால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, முடி ஆரோக்கியமாகவும், வலுவுடனும் இருக்கும்.

  ஆரோக்கியமான வாழ்க்கை முறை  தினமும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, உடற்பயிற்சியை தவறாமல செய்து வந்து, கெட்ட பழக்கங்களை தவிர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், முடியும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ஆண்களே! உங்கள் முடியை ஸ்ட்ராங்காவும், ஆரோக்கியமாவும் வெச்சுக்க இதோ சில டிப்ஸ் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top