சரும செல்களை புதுப்பிக்க
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான சிறு வயது ஆண்களும், பெண்களும் வயதானவர்களாக தோற்றம் கொண்டு காணப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏற்படும் வேலை பளு, கவலை, சரியான உணவின்மை, வெயிலில் செல்லுதல் போன்ற காரணங்களால் முகத்தில் சுருக்கம் ஏற்பட்டுகிறது.முகத்தில் உள்ள செல்களை புதுப்பிப்பதன் மூலம் முகச்சுருக்கத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் செல்களை புதுப்பிக்க என்ன செய்யலாம்? மற்றும் முகச்சுருக்கத்தை எப்படி தடுக்கலாம்? போன்றவற்றை பற்றி பார்க்கலாம்.
முகச்சுருக்கம் ஏற்படாமலிருக்க வெய்யிலில் வெளியே போவதை தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் குடை பிடித்துக் கொண்டு போகலாம். குடை என்பது மழைக்கு மட்டுமல்ல வெயிலுக்கும் தான் பயன்படுத்த வேண்டும்.
சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கண்ணைச் சுற்றியும், உதட்டிற்கு கீழும் அதிக சுருக்கம் ஏற்படும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்து கொள்ளுங்கள்.
அதிகமாக கவலைப்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு அதிக அளவில் முகச்சுருக்கம் உண்டாகும். எனவே கவலைப்படுவதை நிறுத்தி விட்டு சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
எப்போதும் இனிமையான சிந்தனைகளை நினைத்து கொண்டு இருந்தால் முகம் அழகாக இருக்கும். மேலும் முகச்சுருக்கம் மறைந்து விடும்.
முக அழகிற்கும், தோலின் பராமரிப்பிற்கும் தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். பழம் சாப்பிட விரும்பாதவர்கள் பழச்சாறாக செய்து குடிக்கலாம்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அப்போது தான் சருமம் வறண்டு போகாமல் மற்றும் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது அவசியம்.
பப்பாளி, வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வதன் மூலம் முகச்சுருக்கத்தை தடுக்கலாம். தோலில் உள்ள செல்களை புதுப்பிக்கவும் முகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் தக்காளிச்சாற்றை முகத்தில் தடவ வேண்டும்.
0 comments:
Post a Comment