ஹெல்த்தி மல்டி கிரெய்ன் சப்பாத்திரோல்
என்னென்ன தேவை?சப்பாத்தி - 4 (மல்டி கிரெய்ன் மாவில் தயாரித்த சப்பாத்தி),
கேரட் துருவல் - 1/4 கப்,
பீட்ரூட் துருவல் - 1/4 கப்,
வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது),
பீன்ஸ் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது),
புதினா - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை தூள் - 1 டீஸ்பூன்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தக்காளி சாஸ் - தடவுவதற்குத் தேவையான அளவு, மிளகு, சீரகத்தூள் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
கடாயில் ஆலிவ் ஆயில் விட்டு கேரட், பீட்ரூட், வெங்காயம், புதினா, பீன்ஸை வதக்கவும். கறிவேப்பிலை தூள், தனியா தூள், மிளகு, சீரகத் தூள் அதில் போட்டுக் கிளறி உப்பு சேர்த்து கிளறி ஆறவிடவும். கடைசியாக எலுமிச்சைச்சாறு பிழியவும். ஒரு சப்பாத்தியை எடுத்து தக்காளி சாஸை ஒருபுறம் தடவவும். அதன் உள்ளே காய்கறிக் கலவையை 2 டீஸ்பூன் வைக்கவும். சப்பாத்தியை சுருட்டி மேலே டூத் பிக் குத்திப் பரிமாறவும். தக்காளி சாஸுக்கு பதிலாக அவரவர் விருப்பத்துக்கேற்ப கொத்தமல்லி சட்னி, தக்காளி, இஞ்சி சட்னி தடவியும் பரிமாறலாம்.
http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=2465
0 comments:
Post a Comment