தியானம் செய்வதற்கான எண்ணங்கள்... - தமிழர்களின் சிந்தனை களம் தியானம் செய்வதற்கான எண்ணங்கள்... - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Wednesday, September 17, 2014

  தியானம் செய்வதற்கான எண்ணங்கள்...

  தியானம் செய்வதற்கான எண்ணங்கள்...


  தியானம் செய்வது மிகவும் நல்லது. அத்தகைய தியானத்தில் நமது எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவது மிகவும் கடினம். தியானம் செய்பவர்கள் தங்களுடைய எண்ணங்களை எப்படி வைத்து கொள்வது? என்பதை பற்றி பார்க்கலாம்.

  ஒரு அறையில் அமைதியான சூழ்நிலையில் ஏகாந்தமாக அமரவும். நம்முடைய எண்ணங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ள அனைத்தையும் கொண்டுவர வேண்டும்.

  அதாவது வெளியில் உள்ள ஏதும் என்னை வசீகரிப்பதில்லை, உடலிலிருந்து நான் மெதுவாக விடுபடுகிறேன், எனது மனதினை என் நெற்றியின் நடுவில் ஒரு முகப்படுத்துகிறேன்,  நான் இந்த உடலிலிருந்தும், சுற்றுப்புறச் சூழ்நிலையில் இருந்தும் விடுபடுவதை உணர்கிறேன்....

  என் உள்ளம் என்னை சுற்றி உள்ள அமைதியை அனுபவிக்கிறது, அமைதி என்னை ஊடுறுவுகின்றது, அமைதி அலைகள் என்னை மெதுவாக தாலாட்டுகின்றது, என் மனக்கவலைகள் என்னைவிட்டு விலகுகிறது....

  இந்த ஆழ்ந்த அமைதியில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன், நான் அமைதி சொரூபமானவமன் என்பதை அனுபவிக்கிறேன், அமைதியே என்னுடைய இயற்கையான உள் உணர்வு ஆகும், இந்த அமைதியை நான் அனுபவம் செய்து ஆனந்தம் அடைகிறேன்....

  இத்தகைய எண்ணங்களை அவரவருக்கு ஏற்றவாறு மனதில் தொடர்ந்து உருவாக்குங்கள். குறைந்தது ஒரு நாளைக்கு இருமுறையாவது செய்தால் தான் இதன் பலனை ஓரளவு அனுபவிக்க முடியும்.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: தியானம் செய்வதற்கான எண்ணங்கள்... Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top