இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்.Banana blood cancer preventive - தமிழர்களின் சிந்தனை களம் இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்.Banana blood cancer preventive - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Friday, September 12, 2014

  இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்.Banana blood cancer preventive

  இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்


  வாழையில் உடல் நலத்தைப் பேணி பாதுகாக்க கூடிய பல்வேறு மருத்துவப் பொருள்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக `செரடோனின்' `நார் எபிநெப்ரின்' `டோபமைன்' என்னும் மருத்துவ சத்துக்கள் மலிந்துள்ளன. இதில் செரடோனின் என்பது ஒருவகை ``ஹார்மோன் ''மட்டுமின்றி உணர்வு கடத்தி ஆகும். 

  இச்சத்து உடலிலுள்ள பல திசுக்களிலும், ரத்த வைட்டமின்களிலும் குடற்பகுதியின் உட்புறம் உள்ள சளிப்பகுதியிலும் பினியல் கிளாண்ட் என்னும் சுரப்பியிலும் மத்திய நரம்புப் பகுதியிலும் காணப்படுகிறது செர்டோனின் எனும் மருந்து சத்து குடலில் சீரணத்துக்கான திரவத்தைச் சுரக்கச் செய்து, மென் திசுக்களைச் தூண்டி செயல்பட வைப்பது, ரத்த நாளங்கள் சுருங்கி விரிவடையத் துணை நிற்கிறது. 

  ``நார் எபிநெப்ரின்'' என்னும் சத்து உடல் ரத்த அழுத்தத்தைச் சமநிலைப்பத்தி இதயம் சரியாக இயங்குவதற்கு பயன்படுவதோடு மாரடைப்பு வருவதையும் தடுத்து நிறுத்துகிறது. `டோபமைன்' என்னும் மருந்துச் சத்து உணர்வுக் கடத்தியாக மத்திய நரம்பு மண்டலத்தில் பணி செய்கிறது. 

  மேலும் இதயத்துக்கு ஒரு தூண்டு சக்தியாகவும் செயல்படுகிறது. வாழைப்பழமும், தோலும் மலச்சிக்கலைப் போக்கவும், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் ஒரு வாய்க்கு முன் உள்ள ``கோலான்'' என்னும் பகுதியில் வரும் நோய்களைப் போக்கவும் உதவுகின்றன. 

  வாழைப் பழத்தில் விட்டமின், மேங்கனீஸ், விட்டமின், பொட்டாசியம், நார்ச்சத்து, புரோட்டின், மெக்னீசியம் மைக்ரோகிராம், நிபோப்ளேவின், நியோசின் ஆகியன அடங்கியுள்ளன. லண்டன் `இம்பீரியல் காலேஜ்' நடத்திய ஒரு ஆய்வில் குழந்தைகளுக்கு தினம் ஒரு வாழைப்பழம் கொடுத்ததில் 34 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் வருவது தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. 

  ரத்தப்புற்று வராமல் தடுக்கக் கூடியது என்பதால் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அளவுக்கு மீறி கொடுக்காமல் சீரண சக்திக்கு ஏற்ப சிறிது சிறிதாக கொடுத்து அதிகப்படுத்திக் கொள்ளலாம். வாழைப் பழத்தில் விட்டமின் சி சக்தியுள்ளதால் புற்று நோய்களுக்குக் காரணமான செல்களைத் தடுத்து நிறுத்த கூடியதாகும். 

  வாழைப்பழத்தில் உள்ள நார்ச்த்து பெருங்குடலின் கீழ்ப்பகுதி (கோலான்) மற்றும் ஆசன வாய்ப்பகுதி (ரெக்டம்) ஆகிய இடங்களில் புற்றுநோய் வாய்ப்பை குறைக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் விட்டமின் சி மற்றும் விட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் இதய ஆரோக்கியத்துக்கு துணையாக அமைகின்றன. 

  வாழைப்பழத்தில் மிகுந்திருக்கும் பொட்டாசியம் சத்தானது பாரிசவாயு, கக்குவான், முகவாதம், ஆயவற்றில் இருந்து காக்கிறது. மேலும் தசை நார்களுக்கும், எலும்புகளுக்கும் ஊட்டத்தைக் கொடுப்பதோடு சிறுநீரகக் கற்கள் தோன்றுவதும் தவிர்க்கப்படுகிறது. 

  வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடல் மிகவும் சோர்ந்து போவதும் இளைத்து மெலிந்து போவதும் இயற்கை ஆகும். நீர்ச்சத்துக்களான பொட்டாசியம் போன்ற சத்துக்கள் வயிற்றுப்போக்கால் இழக்க நேரிடுகிறது. இந்நிலையில் வாழைப்பழம் சோர்வை போக்குவது மட்டுமின்றி தேவையான பொட்டாசியம் சத்தை ரத்தத்தில் சேர்க்கிறது. 

  வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபேன் என்னும் மருந்துப் பொருள் ஞாபக சக்தியையும், நல்ல மனோநிலையையும் உண்டாக்கக் கூடியது. அமெரிக்காவின் உணவியல் வல்லுநர்கள் அன்றாடம் 21-25கிராம் வாழைப்பழத்தை பெண்களுக்கும் 30-38 கிராம் ஆண்களுக்கும் உணவாகக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார்கள். 

  வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் `எ' சத்து கண்பார்வையை கூர்மைப்படுத்துவதோடு உடலில் உள்ள சளித்தன்மையை சம நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது. வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறன. 

  ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் மாத்திரைகளுக்கு பதிலாக சில வாழைப்பழங்களை அன்றாடம் சாப்பிடுவது மாற்று மருந்தாகும். வாரம் முழுவதும் தினம் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்த சிருக்கு 10 சதவீதம் ரத்த அழுத்தம் குறைந்துள்ளதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்கள் மாதவிலக்கின் போது நன்கு கனிந்த வாழைப்பழங்கள் இரண்டு எடுத்துக் கொள்வதால் வலி குறையும். 
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: இரத்த புற்று நோயை தடுக்கும் வாழைப்பழம்.Banana blood cancer preventive Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top