Some simple natural ways to increase sperm production!விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய இயற்கை வழிகள்! - தமிழர்களின் சிந்தனை களம் Some simple natural ways to increase sperm production!விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய இயற்கை வழிகள்! - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

  • Latest News

    Monday, October 13, 2014

    Some simple natural ways to increase sperm production!விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய இயற்கை வழிகள்!

    பொதுவாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    எனவே இளம் தலைமுறை ஆண்கள் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறையினரின் முன்பு உள்ள முக்கியமான பிரச்சினை குழந்தையின்மைதான். இதற்கு உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
    உடல் ஆரோக்கியம், உணவு பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் துரித உணவகங்களில் கிடைக்கும் உணவுகளும், ருசிக்காக அதிக கொழுப்புசசத்துள்ள உணவுகளை உண்பதன் மூலமும் இளைஞர்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 35 சதவிகித ஆண்கள் இதுபோன்ற குறைபாடினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதேபோல் அதிக புகைப்பழக்கம் மதுப்பழக்கம், மன அழுத்தம், போன்றவையும் ஆண்களின் விந்தணு குறைபாட்டில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    அதேசமயம் ஒமேகா 3 கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் குறைபாட்டினை போக்க சித்த மருத்துவத்தின் மூலம் நம் முன்னோர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றினால் விந்தணு குறைபாடு நீங்கி நல்ல பலன் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
    உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க:
    ஜாதிக்காய்
    ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும்பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப்போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
    பாதம், கல்கண்டு
    தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும். இரவு படுக்கைக்கு செல்ல மூன்று மணி நேரத்திற்கு முன்பே முழு மாதுளம்பழம் சாப்பிட வேண்டும்.
    வால் முளகு, பாதம்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
    அரசம்பழம், அமுக்கராங்
    அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
    அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும். கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
    முருங்கைப் பூ கசாயம், முருங்கைகாய்
    முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை ஒருடம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
    நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Item Reviewed: Some simple natural ways to increase sperm production!விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் சில எளிய இயற்கை வழிகள்! Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top