ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய் - தமிழர்களின் சிந்தனை களம் ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய் - தமிழர்களின் சிந்தனை களம்

728x90 AdSpace

 • Latest News

  Sunday, October 19, 2014

  ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய்  வெண்டைக்காய் எந்தவிதமான நச்சுத் தன்மையையும்  பெற்றிருக்கவில்லை என்பதாலும் சுவை மிக்கது என்பதாலும் இளஞ்சிறார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் கூட தருவதற்கு பாதுகாப்பானதும் பயன் உள்ளதாகும்.

  பல்வேறு உடல் குறைபாடுகளையும், உற்ற நோய்களையும் போக்கும் குணம் வெண்டைக்காய்க்கு உண்டு. மலச்சிக்கல், மனச் சிக்கல் ஆகியவற்றைப் போக்கும் குணம் உண்டு.

  பல்வேறு விட்டமின்களையும், சவ்வுத்தன்மையையும் நீரில் கரையக் கூடியதும் கரையாததுமான இருவகை நார்ச் சத்துக்களையும் கொண்டது (சொலுபுள், இன்சொலு) தோல் நோய்களையும், சர்க்கரை நோயையும், புற்றுநோய் என்னும் கேன்சர் நோயையும் குணப்படுத்த வல்லது. இது சிறுநீரைப் சுத்தப்படுத்துவதோடு அதன் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது ஆகும்.
                                 
  சொட்டு மூத்திரம் என்னும் துன்பத்தைத் தணிப்பதோடு இது சீதபேதியையும் குணப்படுத்த வல்லது. உள்ளுக்கு தாராளமாக வெண்டைக்காயைச் சமைத்து உண்பதாலும் மேலேயும் இதை பூச்சாக பயன்படுத்துவதாலும் உடல் ஆரோக்கியம் பெறுவதோடு தோல் மென்மையும் பளபளப்பும் பெறும்.

  உலகப் பேரழகியாக விளங்கிய எகிப்து தேசத்தின் அரசி கிளியோ பாட்ரா''வின் அழகுக்கு வெண்டைக் காயைப் பயன் படுத்தியதும் மிக முக்கியமான காரணமாகச் சொல்லப் படுகிறது. வெண்டைக்காயின் இளம் விதைகளைத் தீநீர் இட்டுக் குடிப்பதால் தோல் மென்மையும் பளபளப்பும் பெறும்.

  மேற்பூச்சாக இதன் சாற்றை பூசுவதால் குளிர்ச்சியையும் அழகையும் தருவதோடு தோல் நோய்களையும் குணப்படுத்தும். முற்றிய விதைகளைத் தீநீராகச் செய்து பருகுவதால் கடுப்பைத் தருகின்ற வலி குணமாகும். வெண்டைக்காய் விதைகளினின்று எடுக்கப்பட்ட சத்துவம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு அழிக்கவும் வல்லது.

  மேலும் கட்டிகளையும் எதிர்த்து குணமாக்க வல்லது. மேலும் நுண்கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு ஆரோக்கியத்தைத் தரவல்லது. வெண்டைக்காயை நீரிலிட்டு ஆவியைப் பிடிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டை எரிச்சல் குணமாகும்.

  வெண்டைக்காய் உணவோடு அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது என்றும், கண் பார்வை தெளிவு பெறுகிறது என்றும், உடல் எடை வற்றுகிறது என்றும், மலச் சிக்கலை முறிக்கிறது என்றும், ரத்த சோகையை போக்குகிறது என்றும் சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது என்றும் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

  நல்ல தேர்ந்த வெண்டைக்காய் 100 கிராம் எடுத்து கொள்வோம். ஆனால் அதில் பின்வரும் சத்துக்கள் அடங்கியுள்ளன என ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. 33 கலோரி சத்தும், 7.45 கிராம் மாவுச்சத்தும், 1.48 கிராம் சர்க்கரை சத்தும், 3.2 கிராம் நார்ச்சத்தும், 0.19 கி. கொழுப்புச் சத்தும், 2 கி. புரதச் சத்தும், 90.19 கிராம் நீர்ச்சத்தும், 7% விட்டமின் `எ' சத்தும், 17% தயாமினும்,

  5% ரிபோ ஃப்ளேவினும், 7% நியாசினும், 23 மி.கி. விட்டமின் `சி' சத்தும், 0.27 மி.கி. விட். `ஈ' யும், 31.3 விட். `கே'வும், 82 மி.கி. சுண்ணாம்புச் சத்தும், 0.62 மி.கி. இரும்புச் சத்தும், 57 மி.கி. மெக்னீசியமும், 299 மி.கி. பொட்டாசியமும், 0.58 மி.கி. துத்தநாக சத்தும் அடங்கியுள்ளன.

  மேற்கண்ட சத்துக்கள் அத்தனையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை உணவாக உண்ணும் போது உணவே மருந்தாகி மகத்தான பலனை விளைவிக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

  சர்க்கரை நோயாளிகள் இதை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது தாம் உபயோகப்படுத்தும் "இன்சுலின்'' மருந்தின் அளவைக் குறைக்கவோ அல்லது தவிர்க்கவோ இயலும். மேலும் வெண்டைக்காயில் உள்ள சத்து குடல் புண்களை ஆற்றக் கூடியது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளுக்கு சாதாரணமாகவே காணப்படும்.
                                  
  மலச்சிக்கல் பிரச்சினையினின்று விடிவு ஏற்படும் நார்ச்சத்தம், சளித்தன்மையோடு வழவழப்பு மிக்க திரவத்தன்மையும் பெற்றிருக்கும் வெண்டைக்காய் மலக்குடலுக்கு மலத்தை எளிதில் வெளியேற்ற துணை செய்வதோடு மலம் தேங்காமல் பாதுகாக்கிறது. இதனால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய் வராமலும் வந்த போது அதைத் தணிக்கவும் செய்ய உதவுகிறது.

  வெண்டைக்காயைத் தினம் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்புசத்து சேராமல் காத்துக் கொள்ள இயலும். மனிதனுடைய சீரான உறுப்புகள் சரிவர இயங்க நீரில் கரையும் தன்மையுடையதும், நீரில் கரையாத் தன்மையுடையதுமான இருவித நார்ச் சத்தும் மிகவும் அவசியமாகின்றன.

  இவை இரண்டுமே வெண்டைக்காயில் மிக அதிகமாக நமக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. வெண்டைக்காய் சிறப்பாக கெட்ட கொழுப்புச் சத்து சேராமல் இருக்க உதவுகிறது. மேலும் வெண்டைக்காயிலுள்ள மருத்துவ சத்துக்கள் பல்வேறு இதயக் கோளாறுகளையும் சரி செய்யவோ அல்லது தடுக்கவோ (பிரிவென்டிவ்) வல்லது. மேலும் புற்று நோய் வாராமல் தடுப்பதில் முதல் உணவாக வெண்டைக்காய் நிற்கிறது.

  தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப்பகுதியையும் வெட்டி எடுத்து விட்டு நீளவாக்கில் குறுக்காக அரிந்து 200 மி.லி. தண்ணீர் கொண்ட ஒரு தம்ளரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் தெளிவாக எடுத்துக் குடித்துவரும்படி செய்ததில் சில மாதங்களில் ரத்த புற்றுநோய் குணமாகும் என்பது கண்கூடான அனுபவம். பல்லாயிரம் பேருக்கு சர்க்கரை நோயும், கட்டுக்குள் வந்தது தெரியவந்தது.
  • Blogger Comments
  • Facebook Comments

  0 comments:

  Item Reviewed: ரத்த புற்றுநோயை குணமாகும் வெண்டைக்காய் Rating: 5 Reviewed By: malathi arulmani
  Scroll to Top